ஐபிஎல் 2025: சோதிக்க விரும்பிய ரிஷப் பண்ட் பணத்துக்காக தான் இதை செஞ்சாரு.. ஹேமங் பதானி

Hemang Badani
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் இளம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 கோடி என்ற தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக தொகைக்கு விலை போன வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இத்தனைக்கும் ஐபிஎல் இந்தளவுக்கு வளர்வதற்கு காரணமாக கருதப்படும் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கூட இவ்வளவு தொகையை பெற்றதில்லை. இருப்பினும் 27 வயதாகும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியையே மிஞ்சும் அளவுக்கு அசத்தி வருகிறார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றிக்கு உதவிய அவர் வளர்ந்து வரும் வீரராக இருப்பதால் இவ்வளவு தொகைக்கு லக்னோ வாங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அதிக பணத்துக்காக:

இந்நிலையில் 18 கோடிக்கு டெல்லி கேபிட்டல்ஸ் ரிஷப் பண்ட்டை மீண்டும் தக்க வைக்க விரும்பியதாக அதன் பயிற்சி அல்லது ஹேமங்க் பதானி தெரிவித்துள்ளார். ஆனால் அதிகமான சம்பளம் வேண்டும் என்பதற்காக ரிஷப் பண்ட் அதை ஏற்றுக் கொள்ளாமல் வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் டெல்லி அணியில் மீண்டும் தக்க வைக்கப்பட விரும்பவில்லை”

“அவர் தன்னுடைய மார்க்கெட் மதிப்பை சோதிப்பதற்காக ஏலத்திற்கு செல்ல விரும்பினார். பொதுவாக நீங்கள் ஒரு வீரரை தக்க வைக்க விரும்பினால் அணி நிர்வாகமும் அந்த வீரரும் அதற்கு ஒப்புக் கொள்வது அவசியம். அந்த வகையில் நாங்கள் அவரிடம் பேசினோம். மீண்டும் அவரை தக்க வைக்க நிறைய போன் கால் மற்றும் மெசேஜ் செய்தோம். ஆனால் தாம் ஏலத்திற்கு சென்று மார்க்கெட் மதிப்பை சோதிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்”

- Advertisement -

லக்னோவில் பண்ட்:

“குறிப்பாக முதன்மையாக தக்க வைக்கப்படும் அதிகபட்ச வீரருக்கு கிடைக்கும் 18 கோடியை விட தாம் அதிக விலைக்கு செல்வேன் என்று ரிஷப் பண்ட் சொன்னார். நாளின் இறுதியில் அவர் சொன்னது போலவே 27 கோடிகளை பெற்றார். அது அவருக்கு நல்லது. நல்ல வீரரான அவரை நாங்கள் மிஸ் செய்வோம். ஆனால் இப்படித் தான் வாழ்க்கைச் செல்லும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: சச்சின் செய்த அந்த விஷயத்தை செய்தால் இவராலும் அசத்த முடியும்.. விராட் கோலிக்கு – கில்க்றிஸ்ட் அட்வைஸ்

அந்த வகையில் அதிக சம்பளம் வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொந்த மாநிலமான டெல்லி அணியிலிருந்து ரிஷப் பண்ட் வெளியேறியுள்ளார். கடந்த காலங்களில் டெல்லி அணியில் அவர் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். எனவே கேஎல் ராகுலுக்கு பதிலாக அவரை லக்னோ தங்களுடைய புதிய கேப்டனாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement