சச்சின் செய்த அந்த விஷயத்தை செய்தால் இவராலும் அசத்த முடியும்.. விராட் கோலிக்கு – கில்க்றிஸ்ட் அட்வைஸ்

Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் வெற்றியை ருசித்த இந்திய அணியானது இரண்டாவதாக அடிலெய்டில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தற்போது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

சச்சினின் பொறுமை விராட் கோலிக்கு வேணும் :

இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரன்களை குவிக்க தவறிய விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸின் போது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். இதன் காரணமாக இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளிலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அடிலெய்டில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இரண்டு இஇன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களில் வெளியேறிய விராட் கோலி மீது பெரிய அளவில் விமர்சனங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2004-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் என்ன செய்தாரோ அதைப் போன்று விராட் கோலி செய்தால் நிச்சயம் அவரால் மீண்டும் இது தொடரில் ரன் குவிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஃகில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதோ, எதிரணியின் திறமையின் இடமிருந்து வருவதோ கிடையாது. நாம் நமது கட்டுப்பாட்டில் நமது ஆட்டத்தை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.

- Advertisement -

2004 ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு வெளியே சென்ற பந்துகளை துரத்தி விளையாடாமல் 241 ரன்கள் குவித்தாரோ அதேபோன்று விராட் கோலியும் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை துரத்தாமல் தனக்கு நேராக வரும் பந்துகளை விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம் என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : உண்மையாவே கே.கே.ஆர் அணியில் எனக்கு அந்த பதவி கிடைச்சா நல்லாதான் இருக்கும் – வெங்கடேஷ் ஐயர் விருப்பம்

அவர் கூறியது போன்றே கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது தொடர்ச்சியாக வெளியில் வந்த பந்துகளை அடித்து ஆட்டமிழந்து வந்த சச்சின் சிட்னி டெஸ்ட் போட்டியின் போது 170 ரன்கள் தாண்டும் வரை ஒரு கவர் டிரைவ் கூட அடிக்கவில்லை. அந்த போட்டியில் 436 பந்துகளை சந்தித்த அவர் 33 பவுண்டர்களுடன் 241 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement