பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் சந்தித்த தோல்வியிலிருந்து இந்தியா மீண்டு எழுந்து வெற்றிப் பாதைக்கு திரும்பியது.
முன்னதாக நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா கடந்த மாதம் படுதோல்வியை சந்தித்தது. அப்படி சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இந்தியாவை கண்டிப்பாக இந்த தொடரில் வீழ்த்துவோம் என்று ரிக்கி பாண்டிங் முதல் பட் கமின்ஸ் வரை முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தெரிவித்தார்கள். ஆனால் முதல் போட்டியிலேயே பும்ரா தலைமையில் வென்ற இந்தியா அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
திறமையான இந்தியா:
குறிப்பாக ரோகித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாமலேயே வென்ற இந்தியா தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. இந்நிலையில் ரோஹித், அஸ்வின், ஷமி போன்ற முக்கிய வீரர்கள் வந்தால் ஆஸ்திரேலிய அணியால் சமாளிக்க முடியாது என முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவை குறைத்து மதிப்பிடாமல் சிறப்பாக விளையாடுமாறு அவர் ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார்.
இது பற்றி சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்திரிகையில் அவர் கூறியது பின்வருமாறு. “850 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா அவர்களுக்கு விளையாடவில்லை. ரோகித் சர்மா, கில் ஆகியோர் அடிலெய்ட் போட்டிக்கு இந்தியர்களை பலப்படுத்த வருவார்கள் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. 229 விக்கெட்டுகள் எடுத்த ஷமியும் தனது வரவுக்காக காத்திருக்கிறார்”
ஜெய்ஸ்வால் அசத்தல்:
“ஜெய்ஸ்வாலின் பயணம் இந்தியாவின் திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு ஏன் உலக கிரிக்கெட்டில் அவர்களுக்கு ஒரு தெளிவான விளிம்பை அளிக்கிறது என்பதை உள்ளடக்கியது. இளம் இடது கை வீரரான அவர் 10 வயதில் மும்பைக்கு சென்றார். இந்தியாவுக்காக விளையாடும் கனவில் அவர் சிறந்த போட்டியை நாடினார். இந்திய லெவன் அணிக்குள் வருவதற்கு அவருடைய உறுதிப்பாடு குறிப்பிடத்தக்கதாக இருந்தது”
இதையும் படிங்க: எல்லாமே சரியா தான் பண்ணீங்க.. ஆனா கே.கே.ஆர் செய்த தப்பு இதுதான் – சுட்டிக்காட்டிய ரசிகர்கள்
“இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட அவரைப் போல நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு இந்தியாவில் உள்ள மாநில அணிகளில் கூட வாய்ப்பு கிடைப்பதில்லை” என்று கூறினார். அந்த வகையில் இந்திய அணி மிகவும் திறமை வாய்ந்தது என்று கிரேக் சேப்பல் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



