பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வரும் முதல் டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கிய அந்த 5 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி அபாரமாக பேட்டிங் செய்து இரண்டாவது இன்னிங்ஸில் 487-6 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இந்தியா அசத்தல்:
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 161, கேஎல் ராகுல் 77, விராட் கோலி 100* ரன்கள் குவித்தார்கள். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக நேதன் லயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இறுதியில் 534 ரன்கள் துரத்தும் ஆஸ்திரேலியா 3வது நாள் முடிவில் 12-3 என தடுமாறி வருகிறது. இன்னும் அந்த அணிக்கு 522 ரன்கள் தேவைப்படுவதால் இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.
முன்னதாக இந்தப் போட்டியில் சமீப காலங்களாகவே தடுமாறிய விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி சதத்தை அடித்தார். அதனால் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்த அவர் சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்தார். இதையும் சேர்த்து உள்ளூர், முதல் தரம், டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விராட் கோலி தன்னுடைய 100வது சதத்தை பதிவு செய்தார். இதையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார்.
கோலியின் சாதனை:
ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 7 சதங்கள் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். மேலும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கர் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்தப் பட்டியல்:
1. சுனில் காஸ்கர் : 7, வெஸ்ட் இண்டீஸில்
1. விராட் கோலி: 7, ஆஸ்திரேலியாவில்
2. ராகுல் டிராவிட்: 6, இங்கிலாந்தில்
2. சச்சின் டெண்டுல்கர்: 6, ஆஸ்திரேலியாவில்
இதையும் படிங்க: நான் எவ்ளோ கஷ்டப்பட்டேனு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் – சதம் அடித்த பிறகு விராட் கோலி நெகிழ்ச்சி
இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அதிக கேட்ச்களை பிடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்த விராட் கோலி புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ராகுல் டிராவிட்: 210
2. விவிஎஸ் லக்ஷ்மன்: 135
3. விராட் கோலி: 116*
4. சச்சின் டெண்டுல்கர்: 115
5. சுனில் கவாஸ்கர்: 108



