இந்திய வாய்ப்பில் அழுதுட்டேன்.. அந்த பேர் தான் 3 விக்கெட்ஸ் எடுக்க ஹெல்ப் பண்ணாங்க.. ஹர்ஷித் ராணா

Harshit Rana 2
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நவம்பர் 22 முதல் நடைபெற்ற வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 150 ரன்கள் மட்டுமே குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியை 104 ரன்களுக்கு சுருட்டி இந்தியா அசத்தியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பும்ரா 5, அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் விளையாடும் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 172-0 ரன்கள் குவித்து வலுவாக விளையாடி வருகிறது.

- Advertisement -

ஹர்ஷித் ராணா அறிமுகம்:

களத்தில் ஜெய்ஸ்வால் 90*, கேஎல் ராகுல் 62* ரன்களுடன் உள்ளார்கள். முன்னதாக இந்த போட்டியில் அறிமுகமான ராணா இந்தியாவுக்கு பெரிய தொல்லையை கொடுக்கக்கூடிய ட்ராவிஸ் ஹெட் உட்பட 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதற்கு விராட் கோலி மற்றும் பும்ரா தமக்கு மிகப்பெரிய ஆலோசனைகளை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்த போது அழுததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பும்ரா பாய் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து ஆலோசனைகள் கொடுத்தார். விராட் பாயும் ஆலோசனை கொடுத்தார். அது எனக்கு நிறைய உதவியது. அவர்களைப் போன்றவர்கள் எனக்கு பந்தை எங்கே வீச வேண்டும், வீசக்கூடாது போன்ற உள்ளீடுகளை வழங்கினார்கள்”

- Advertisement -

இந்திய வாய்ப்பு:

“அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையை கொடுத்தது. இந்திய அணிக்காக அறிமுகமாகும் நாளுக்கு முன் என்னால் சரியாக தூங்க முடியவில்லை. ஆனால் காலையில் எந்த படபடப்புகளும் இருந்தன என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கான அறிமுக தொப்பியை பெறும் போது படபடப்பு இருந்தது. அதை பெறும் போது நான் அழுது விட்டேன்”

இதையும் படிங்க: 5இல் 2.. 700 ரன்ஸ்.. இந்த ஸ்பெஷல் பையனுக்கு சதத்தை விட இதான் பிடிக்கும்.. ஜெய்ஸ்வாலை பாராட்டிய கவாஸ்கர்

“ஒரு குழந்தையாக இருக்கும் போது நான் எனது தந்தையுடன் அதிகாலையிலேயே எழுந்து ஆஸ்திரேலியாவில் விளையாடும் போட்டிகளை பார்ப்பேன். இன்று அங்கே நான் இந்தியாவுக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயம்” என்று கூறினார். இந்த நிலையில் இந்தியா 218 ரன்கள் முன்னிலை வகிப்பதால் இப்போட்டியில் போராடி வெல்லும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Advertisement