218 ரன்ஸ் லீட்.. ஆஸியை சொந்த மண்ணில் திணறடிக்கும் இந்தியா.. ஜெய்ஸ்வால் – ராகுல் வரலாற்று சாதனை

Rahul Jaiswal
- Advertisement -

பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் நடைபெற்று வருகிறது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவை அனல் பறக்க பந்து வீசிய இந்தியா 104 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி மிரட்டியது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் – ஜெய்ஸ்வால் ஆகியோர் நிதானமாக விளையாடினர்.

- Advertisement -

ராகுல் – ஜெய்ஸ்வால் அபாரம்:

அதில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஜெய்ஸ்வால் மிகவும் நிதானமாக பேட்டிங் செய்த ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து ராகுல் மறுபுறம் நங்கூரமாக விளையாடி ரன்களை சேர்த்தார். நேரம் செல்ல செல்ல அசத்தலாக விளையாடிய இந்த ஜோடியில் இருவருமே அரை சதம் அடித்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்கள்.

அவர்களை அவுட்டாக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினார்கள். அந்த வகையில் தொடர்ந்து நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடி இரண்டாவது நாள் முடிவில் அவுட்டே ஆகாமல் பேட்டிங் செய்தது. அவர்களுடைய ஆட்டத்தால் 2வது நாள் முடிவில் இந்தியா 172-0 ரன்கள் குவித்து மொத்தமாக 212 ரன்கள் முன்னிலை பெற்று இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 90*, ராகுல் 62* ரன்களுடன் உள்ளனர்.

- Advertisement -

வரலாற்று சாதனை:

முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150க்கு ஆல் அவுட்டான இந்தியா 2வது இன்னிங்ஸில் இதுவரை விக்கெட் இழக்காமல் 172 ரன்கள் எடுத்துள்ளது. அதற்கு ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் 338 பந்துகள் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்ததே முக்கிய காரணமாகும். இதன் மூலம் சேனா நாடுகளில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற வரலாற்றுச் சாதனையை அவர்கள் படைத்துள்ளார்கள்.

இதையும் படிங்க: செளரவ் கங்குலியை முந்திய ஜெய்ஸ்வால்.. கம்பீரின் 16 வருட சாதனையை தூளாக்கி புதிய சாதனை

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா எனப்படும் சேனா நாடுகளில் ஒரு போட்டியில் அதிக பந்துகளை எதிர்கொண்ட இந்திய ஓப்பனிங் ஜோடிகள் பின்வருமாறு:
1. 338 பந்துகள்: ஜெய்ஸ்வால் – கே.எல் ராகுல், பெர்த், 2024*
2. 337 பந்துகள்: வாசிம் ஜாபர் – தினேஷ் கார்த்திக், கேப் டவுன், 2007
3. 270 பந்துகள்: மனோஜ் பிரபாகர் – ராமன், ஆக்லாந்து, 1990

Advertisement