இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக தனது இரண்டாவது குழந்தையை பிறந்ததன் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அதனை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியுடன் இணையும் அவர் எஞ்சியுள்ள அனைத்து போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
கேப்டன்சியில் கலக்கிய ஜஸ்ப்ரீத் பும்ரா :
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது போட்டியின் போது இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவிற்கு பதிலாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நவம்பர் 22-ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக பங்கேற்ற அவர் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் சுருண்டது. இப்படி இந்திய அணி 150 ரன்களுக்கு சுருண்டு ஏமாற்றம் அளித்திருந்த வேளையில் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்த்த வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ராவின் அருமையான கேப்டன்சி காரணமாக தற்போது ஆஸ்திரேலிய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை எடுத்து 67 ரன்கள் என்கிற நிலையுடன் போராடி வருகிறது.
அதனைத்தொடர்ந்து 83 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் இந்திய அணியை விட குறைவாகவே ரன்களை குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி இப்படி சிக்கலை சந்திக்க பும்ரா எடுத்த ஒரு சிறப்பான முடிவு தான் காரணம் என்று குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதல் நாள் போட்டியில் 50 ஓவர்களை கூட முழுவதுமாக பிடிக்காத இந்திய அணி 150 ரன்கள் ஆட்டமிழந்த வேளையில் எஞ்சியுள்ள ஓவர்களை மூன்றே வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பும்ரா முடித்துள்ளார்.
அந்த வகையில் இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 27 ஓவர்கள் வீசிய வேளையில் அதில் பும்ரா 10 ஓவர்களும், சிராஜ் 9 ஓவர்களும், ஹர்ஷித் ராணா 8 ஓவர்கள் என முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களே ஓய்வின்றி வீசியதால் ஆஸ்திரேலிய அணியின் வீரர்களை அழுத்தத்திற்கு தள்ளி விக்கெட்டுகளை வீழ்த்த முடிந்தது. ஒருவேளை நிதிஷ் குமார் ரெட்டியோ அல்லது வாஷிங்டன் சுந்தரையோ அட்டாக்கில் கொண்டு வந்திருந்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணி ஒரு பெரிய பார்டர்ஷிப் அமைத்து இருந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
இதையும் படிங்க : 11 ரன்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 41 ரன்கள் குவித்த நிதீஷ் ரெட்டி – என்ன நடந்தது?
ஆனால் அதனை செய்யாத பும்ரா 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் மிகச் சிறப்பாக தொடர்ச்சியாக அழுத்தத்தை கொடுத்ததே ஆஸ்திரேலிய அணி சரிவை சந்திக்க காரணமாக மாறியுள்ளது. இதன் காரணமாக பும்ராவின் கேப்டன்சி தற்போது பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



