11 ரன்களில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி 41 ரன்கள் குவித்த நிதீஷ் ரெட்டி – என்ன நடந்தது?

Nitish
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பெர்த் நகரில் நவம்பர் 22-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதிக ரன்கள் குவித்த நிதீஷ் ரெட்டி :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 150 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி 41 ரன்களையும், ரிஷப் பண்ட் 37 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் குவித்துள்ளதால் நாளை 83 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்குகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணிக்காக அறிமுகமான இளம் ஆல்ரவுண்டான நிதீஷ் ரெட்டி எட்டாவது வீரராக களம் இறங்கி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 59 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 41 ரன்கள் குவித்து இறுதி வீரராக ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது 11 ரன்னில் ஒரு விக்கெட் வாய்ப்பில் இருந்து தப்பிய நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் வரை சென்று இந்திய அணிக்காக இந்த இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியின் போது 11 ரன்கள் எடுத்திருக்கையில் நிதிஷ் குமார் மிட்சல் ஸ்டார்க் வந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

இதையும் படிங்க : நாட்டுக்காக அந்த தோட்டாவை ஏத்துக்கோங்கன்னு கம்பீர் சொன்னது.. நிறைய ஹெல்ப் பண்ணுச்சு.. நிதிஷ் பேட்டி

ஆனால் அந்த விக்கெட்டில் சந்தேகம் இருந்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் ரிவ்யூ செய்யவில்லை இருப்பினும் ரிப்ளேவின் போது அது அவுட் எனத் தெரிந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர் 41 ரன்கள் குவித்து இந்திய அணி 150 ரன்களை எட்ட உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement