ப்ராட்மேன், சச்சினே விளையாடலாம்.. புஜாரா இல்லாதது பற்றி.. பும்ராவுக்கு ஆலோசனை கொடுத்த கபில் தேவ்

Kapil Dev
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அந்தத் தொடரில் இந்திய அணிக்காக பும்ரா விளையாடாதது பின்னடைவாக இருக்கும் என்று பல முன்னாள் வீரர்கள் தெரிவித்தார்கள். ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைக்க அவர் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் இம்முறை சுமாரான ஃபார்மில் இருப்பதால் அவரை இந்திய அணி நிர்வாகம் கழற்றி விட்டுள்ளது. இந்நிலையில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விடப்பட்ட புஜாராவை பற்றி இனியும் எதற்காக பேச வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

புஜாரா எதற்கு:

“உங்களிடம் இருக்கும் சிறந்த அணியை வைத்து நீங்கள் நன்றாக விளையாட வேண்டும் அவ்வளவு தான். அதை விட்டுவிட்டு இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் தேவையா என்று யாரும் கேட்க வேண்டியதில்லை. அப்படி பார்த்தால் ஏன் ஆஸ்திரேலியா அணிக்காக டான் பிராட்மேன் விளையாடவில்லை? ஏன் அணியில் இல்லாத ஒருவரை பற்றி மக்கள் பேச வேண்டும்” என்று கூறினார்.

மேலும் அனுபவம் இல்லாத கேப்டன்ஷிப் பதவியில் இந்திய அணியை வழி நடத்தும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு அவர் கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “பும்ரா முடிந்தளவுக்கு சாதாரணமாக விளையாட வேண்டும். எதையும் எக்ஸ்ட்ராவாக செய்ய முயற்சிக்கக் கூடாது. அனைத்தையும் போகிற போக்கில் அவர் விட வேண்டும். அதை செய்தாலே கொஞ்சம் நாட்களில் அவர் கற்றுக் கொள்வார்”

- Advertisement -

இந்தியா அசத்தும்:

“எனவே அவரிடம் என்ன எதிர்பார்க்கலாம்? என்று பேசுவது நியாயமற்றது. இப்போதே அதைப்பற்றி பேசி அவர் மீது நம் எதிர்பார்ப்புகளையும் பாரத்தையும் ஏற்றக் கூடாது. ரோகித் சர்மா, முகமது ஷமி ஆகியோர் விளையாடாமல் இருக்கலாம். ஆனால் சமீப காலங்களில் இந்திய அணி வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது. அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது”

இதையும் படிங்க: எல்லாரும் புஜாராவாக முடியுமா? 52 பந்தில் 2 ரன்ஸ்.. வாயை விட்டு சிக்கிய லபுஸ்ஷேன்.. என ரசிகர்கள் அதிருப்தி

“சில நேரங்களில் நீங்கள் அதீத தன்னம்பிக்கையுடன் தெரிவீர்கள். ஆனால் தற்போதைய இந்திய அணி தன்னம்பிக்கையில் உண்மையாகவே நல்ல முன்னேற்றத்தை சந்தித்துள்ளது. அது பெரிய இடத்தில் அசத்துவதற்காக எந்த அணிக்கும் தேவையான ஒன்று” என்று கூறினார். இந்த நிலையில் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் குவித்து பின்னர் ஆஸ்திரேலியாவை 67-7 என கட்டுப்படுத்தி வெற்றிக்காக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement