ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 150 ரன்கள் மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 67-7 என தடுமாறி வருகிறது. உஸ்மான் கவாஜா 8, ஸ்மித் 0, டிராவிஸ் ஹெட் 11, மார்ஷ் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். களத்தில் அலெக்ஸ் கேரி 19*, மிட்சேல் ஸ்டார்க் 6* ரன்களுடன் உள்ளார்கள். தற்போதைய நிலையில் 83 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா இப்போட்டியில் போராடி வெற்றி பெற முயற்சிக்கவுள்ளது.
புஜாரா போல:
முன்னதாக இந்த தொடரில் புஜாரா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என்று நிறைய முன்னாள் வீரர்கள் தெரிவித்தார்கள். ஆனால் எங்களுடைய அணியில் புஜாரா இல்லாத குறையை தாம் அவருடைய ஸ்டைலில் விளையாடி தீர்க்கப் போவதாக ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் தெரிவித்தார். குறிப்பாக நீண்ட நேரம் விளையாடி இந்திய பவுலர்களை களைப்படையை வைத்து ரன்கள் குவிக்கும் ஸ்டைலை பின்பற்ற உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அந்த கோட்பாட்டுடன் இப்போட்டியில் களமிறங்கிய அவர் ஆரம்பத்திலேயே பும்ரா வேகத்தில் எட்ஜ் கொடுத்தார். ஆனால் அதை விராட் கோலி தவற விட்டதால் அதிர்ஷ்டமாக தப்பிய அவர் புஜாரா போலவே அதிகமான பந்துகளை எதிர்கொண்டு விளையாடினார். அந்த வகையில் பேட்டிங் செய்த அவர் 52 பந்துகள் எதிர்கொண்டு 2 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் வேகத்தில் அவுட்டானார்.
லபுஸ்ஷேன் சொதப்பல்:
அதைப் பார்த்த வர்ணனையாளர்கள் 4000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த அனுபவம் கொண்ட லபுஸ்ஷேன் தம்முடைய ஸ்டைலிலேயே விளையாடியிருக்கலாம் என அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். ஏனெனில் புஜாரா போல் விளையாட முயற்சித்த அவர் அதற்காக சிங்கிள் எடுக்க கூட முயற்சிக்கவில்லை. அதனால் இரண்டாவது இன்னிங்சிலாவது உங்களுடைய ஸ்டைலில் விளையாடுங்கள் என்று அவரை முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் விமர்சித்தார்கள்.
இதையும் படிங்க: ஆஸியின் தெறிக்க விட்ட மாஸ்டர்க்ளாஸ் பும்ரா.. ஆல் ஃபார்மட் உலகின் பெஸ்ட் பவுலர்.. வாசிம் அக்ரம்
மறுபுறம் இந்திய ரசிகர்கள் அனைவராலும் புஜாராவாக முடியுமா என்று அவருடைய ஆட்டத்தை பார்த்து சமூக வலைதளங்களில் கருத்தை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் சமீப காலங்களில் புஜாராவே மிகவும் நங்கூரமாக விளையாடி பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அதனாலேயே தற்போது அவர் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



