உலகின் பெஸ்ட்.. 24 கேரட் கோல்ட் நெருப்பு.. கூகுளால் முடியல.. பும்ராவை பாராட்டிய மலிங்கா, வாகன்

Lasith Malinga
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவினுடைய சொந்த மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. பெர்த் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 67-7 ரன்கள் எடுத்து தடுமாற்றமாக பேட்டிங் செய்து வருகிறது. கவாஜா 8, மெக்ஸ்வீனி 10, ஸ்டீவ் ஸ்மித் 0, பட் கமின்ஸ் 3 ரன்களில் பும்ரா வேகத்தில் அவுட்டானார்கள். மார்ஷ் 6, லபுஸ்ஷேன் 2 ரன்களில் சிராஜ் வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார்கள். டிராவிஸ் ஹெட் 11 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

பும்ரா அபாரம்:

களத்தில் அலெக்ஸ் கேரி 19*, மிட்சேல் ஸ்டார்க் 6* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 150க்கு சுருண்டதால் கண்டிப்பாக மோசமாக தோற்கும் என்று ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்திலேயே அனல் பறக்க பந்து வீசிய கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை முன்னிலைப்படுத்தினார்.

அதன் காரணமாக தற்சமயத்தில் 83 ரன்கள் முன்னிலை வகிக்கும் இந்தியா போராடி வெற்றி பெறுவதற்கான சூழ்நிலையில் இருக்கிறது. அவரது பவுலிங் பற்றி இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் உலகின் சிறந்த பும்ரா” என்று பாராட்டியுள்ளார். முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் “ஓகே கூகுள். பும்ராவை விளையாடு. சாரி பும்ராவை எதிர்கொள்ள முடியவில்லை” என்று வேற லெவலில் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

24 கேரட் தங்கம்:

அதாவது பும்ராவை தாம் உட்பட யாராலும் எளிதாக எதிர்கொள்ள முடியாது என்று கூகுள் பாராட்டுவதாக வாஷிங் ஜாபர் பாராட்டியுள்ளார். அதே போல முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா “பும்ரா 24 கேரட் தங்கம்” என்று ட்விட்டரில் பாராட்டியுள்ளார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் “பெர்த்தில் உலகின் சிறந்த ஜஸ்ப்ரித் பும்ரா நெருப்பாக செயல்படுகிறார்” என்று பாராட்டியுள்ளார்”

இதையும் படிங்க: ஒரே நாளில் இத்தனை விக்கெட்டுகளா? 72 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் – நிகழ்ந்த சம்பவம்

இது போக இன்னும் நிறைய முன்னாள் வீரர்கள் சமூக வலைதளங்களில் பும்ராவை பாராட்டி வருகிறார்கள். அதே போல ரசிகர்களும் இந்திய அணியின் கேப்டனை சமூக வலைதளங்களில் பாராட்டியிருக்கிறார்கள். இதை அடுத்து ஆஸ்திரேலியாவை 150 ரன்களுக்குள் சுருட்டி இரண்டாவது இன்னிங்ஸில் பெரிய இலக்கை நிர்ணயிக்க இந்தியா போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement