அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக பறிகொடுத்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு எவ்வித பிரச்சனையும் இன்றி செல்லும்.
ரோஹித் சர்மா எடுத்த முடிவு சரிதான் :
இதன் காரணமாக இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ள வேலையில் ரோகித் சர்மா தவித்து மற்ற அனைத்து இந்திய வீரர்களும் தற்போது ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே வரும் நவம்பர் 22-ஆம் தேதி பெர்த் நகரில் முதல் டெஸ்ட் போட்டியானது துவங்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தனது இரண்டாவது குழந்தை பிறந்ததன் காரணமாக ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியிலிருந்து இந்திய அணியுடன் அவர் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே ரோகித் சர்மாவிற்கு குழந்தை பிறந்து விட்டதால் அவர் முதல் போட்டியில் இருந்து ஆட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது சரிதான் என்றும் அவருக்கு குடும்பம் மிகவும் முக்கியம் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : எனது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றால் எனது மகள் பிறந்த தினம் தான். அந்த தினத்தின் போது எந்த டெஸ்ட் போட்டியை விடவும், எந்த வெற்றியை விடவும், எந்த உலக கோப்பையை விடவும் எனக்கு குடும்பம் தான் பெரியது. அத்துடன் எதனையும் ஒப்பிட முடியாது.
இதையும் படிங்க : சயீத் முஸ்தாக் கோப்பையில் தேர்வான ஷமி.. அப்படின்னா ஆஸியில் எப்போது விளையாடுவார்? ரசிகர்கள் ஏமாற்றம்
எனவே தற்போது ரோகித் சர்மா தனது குடும்பம் தான் முக்கியம் என்று முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது சரியான ஒரு முடிவு தான். இருந்தாலும் ரோகித் சர்மா இல்லாத இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் போது பின்னடைவை சந்திக்கும். நானாக இருந்திருந்தாலும் ரோஹித் சர்மா எடுத்து அதே முடிவை தான் எடுத்திருப்பேன் என மைக்கேல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.



