ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி துவங்கும் அந்த தொடரில் இந்தியாவை எளிதாக வீழ்த்துவோம் என்று ரிக்கி பாண்டிங் முதல் பட் கமின்ஸ் வரை பெரும்பாலான முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய கேப்டன்களும் வீரர்களும் தெரிவித்து வருகிறார்கள்.
ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் சந்தித்த வலிக்கு மருந்து போடும் வகையில் ஆஸ்திரேலியாவில் வெற்றிக்காக இந்தியா விளையாடும் என்று முன்னாள் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். எனவே இந்தியாவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று அவர் ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார்.
குறைச்சு எடை போடாதீங்க:
இது பற்றி அவர் தெரிவித்தது பின்வருமாறு. “அனைத்து விதமான விளையாட்டிலும் சாம்பியன்களை நீங்கள் எப்போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் அவர்கள் சாம்பியன். இந்தியாவில் ஒன்றரை பில்லியன் கிரிக்கெட்டை விரும்பும் மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களையும் உலகின் மற்ற நாடுகளில் உள்ள மக்களையும் ஒப்பிட்டு பாருங்கள். இந்தியாவில் உள்ள மக்கள் எப்போதும் வெற்றிகளை எதிர்பார்ப்பார்கள்”
“அதனால் இந்திய அணி அழுத்தத்தில் இருக்கும். எனவே அவர்கள் மீண்டும் இப்படி வெற்றிக்காக சண்டையிடுவார்கள் என்பது முக்கியம். தற்போது இந்திய அணி வீரர்கள் வயது காரணமாக குறைத்து மதிப்பிடப்படுகிறார்கள். விராட் கோலி ஆஸ்திரேலியாவில் விளையாடுவது இது கடைசி என்று நம்புகிறேன். சூப்பர்ஸ்டாரான அவரும் ரோகித்தும் அஸ்வினும் ஜடேஜாவும் பும்ராவும் இங்கே விளையாடுவதை மக்கள் மகிழ்ச்சியுடன் பார்ப்பார்கள்”
இந்தியா போராடும்:
“ஆஸ்திரேலிய அணியிலும் பவுலர்கள் தற்போது சீனியர்களாக இருக்கிறார்கள். அவர்களும் நீண்ட காலம் விளையாடப் போவதில்லை என்பதால் அவர்களையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும். வடக்கு மெல்போர்ன் அணி பிரஸ்பேன் தோற்கடித்தது போல நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளார்கள். நியூசிலாந்துக்கு அவமரியாதையாக இங்கே எதுவும் சொல்லவில்லை”
இதையும் படிங்க: நீங்க அங்கேயே இருங்க பி.சி.சி.ஐ போட்ட உத்தரவு.. இந்திய அணியுடன் இணைந்த தேவ்தத் படிக்கல் – என்ன காரணம்?
“அவர்களும் நிறைய விஷயங்களை சாதித்துள்ளார்கள். 3 – 0 என்ற கணக்கில் இந்தியாவில் வெற்றி பெறுவது அற்புதமான சாதனை. அதன் காரணமாக இந்திய அணி பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பார்கள். அதே சமயம் அந்த தோல்விக்கு சமமாக இங்கே வெற்றி பெற்று மருந்து போடுவதற்காக அவர்கள் திடத்துடன் இருப்பார்கள்” என்று கூறினார்.



