இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது டி20 போட்டியானது நேற்று செஞ்சூரியன் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிரணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை குவித்தது.
இதுதான் எங்க வெற்றிக்கான காரணம் :
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா 107 ரன்களை குவித்து அசத்தினார். பின்னர் 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இறுதிவரை போராடி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்ததால் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறுகையில் :
இந்த வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் டீம் மீட்டிங்கின்பது இதுகுறித்து தான் அதிகம் பேசியிருந்தோம். நிச்சயமாக அதிரடியாக விளையாடுவது மட்டுமே தான் எங்களுடைய பாணியாக இருக்கும் என்று கருதினோம். எனவே அனைவரும் அதிரடியாக விளையாட திட்டமிட்டோம்.
ஐபிஎல் தொடரில் இதேபோன்ற அதிரடியான ஆட்டத்தை தான் வெளிப்படுத்துகிறோம். அதே போன்று வலைப்பயிற்சியிலும் அதிரடியாக விளையாட முயற்சிக்கிறோம். அந்த வகையிலே இந்த போட்டியிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி.
இதையும் படிங்க : அடிச்சா செஞ்சூரி இல்லனா டக் அவுட்.. ரிஷப் பண்ட்டை முந்தி சஞ்சு சாம்சன் மோசமான உலக சாதனை
இது போன்ற மற்ற வீரர்களின் ஆட்டம் ஒரு கேப்டனாக என்னுடைய பணியை எளிதாக்குகிறது. அதுமட்டுமின்றி இந்த போட்டியில் ஃபீல்டிங்கிலும் எங்களது வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக சூரியகுமார் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



