ஏற்கனவே இந்திய மண்ணில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ சார்பில் அறிவிக்கப்பட்டு விட்டது.
ஆஸ்திரேலியா பயணிக்காத ரோஹித் சர்மா :
அதனை தொடர்ந்து நவம்பர் 10-ஆம் தேதியான நேற்று இந்திய அணி இரண்டு குழுக்களாக பிரிந்து ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டது. இந்த டெஸ்ட் தொடரில் இடம் பிடித்து இருந்த விராட் கோலி ஏற்கனவே தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியா பயணித்துவிட்ட நிலையில் நேற்று மற்ற வீரர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றனர்.
இந்த பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என்பதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியை தவறவிடுகிறார் என்பது உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக பும்ராவும், துவக்க வீரர்களா கே.எல் ராகுல் அல்லது அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய இருவரில் ஒருவர் யாசஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து விளையாடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ரோகித் சர்மா கடைசி நேரத்தில் இந்த பயணத்தில் இருந்து விலக காரணம் என்ன? என்ற கேள்வியும் பலரது மத்தியிலும் இருந்து வறுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா பயணிக்காததற்கு முக்கியமான காரணம் என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் நேற்று முன்தினம் பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி ஆகிய இருவரிடம் ஆலோசனை நடத்திய ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவிற்கு செல்லவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் யாதெனில் : ரோகித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதியினர் தங்களது இரண்டாவது குழந்தையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை ரோகித் சர்மா தவற விட இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது மோசமான சாதனையை முறியடித்த – சஞ்சு சாம்சன்
இப்படி ரோகித் சர்மா மற்றும் ரித்திகா ஆகியோரது இரண்டாவது குழந்தை பிறப்பிற்காக தான் ரோகித் சர்மா செல்லவில்லை என்ற நல்ல செய்தி என்பது உறுதியாகி உள்ளதால் ரசிகர்களுக்கு விரைவில் அவரது இரண்டாவது குழந்தை குறித்த நல்ல செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



