ரோஹித் சர்மா டெஸ்டுக்கு தேவையான தன்னோட பலத்தை நம்பல.. அது தான் சரிவுக்கு காரணம்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் இந்தியா முழுமையான ஒய்ட் வாஷ் தோல்வியையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சமீப காலங்களாகவே அணியின் நலனுக்காக சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் அடித்து நொறுக்குவேன் என்று அணுகுமுறையை ரோஹித் சர்மா பின்பற்றுகிறார். அதைப் பின்பற்றி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் வெற்றிகரமாக செயல்பட்டார். சொல்லப்போனால் 2024 டி20 உலகக் கோப்பையை அவர் அந்த அணுகுமுறையை பின்பற்றியே வென்றும் காட்டினார்.

- Advertisement -

இது டி20 இல்லையே:

ஆனால் அதே அணுகுமுறையை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோகித் சர்மா பின்பற்றியது வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்துவதற்கு தேவையான தம்முடைய தடுப்பாட்டத்தை (ஃடிபன்ஸ்) ரோகித் சர்மா நம்பவில்லை என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். அதுவே இந்த தொடரில் ரோஹித் சர்மாவின் சுமாரான ஆட்டத்துக்கு காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா பொறுப்புடன் விளையாடவில்லை என்று நான் ஒருபோதும் கூற மாட்டேன். ஏனெனில் வெற்றி, ரன்களை பெறுவதற்காக அவர் தனது சொந்த வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அதற்காக அவர் தன்னுடைய தடுப்பாட்டத்தை நம்பவில்லை. அது அவரை இன்னும் அமைதியற்றவராக மாற்றியது”

- Advertisement -

தடுப்பாட்ட பேட்டிங்:

“எனவே எதிர்தாக்குதலை செய்வோம் என்று அவர் முடிவெடுத்து அதை செய்தார். ஏனெனில் இலக்கு பெரியதாக இல்லை. அதனால் வங்கதேசத்துக்கு எதிரான தொடரை போல அவர் அங்கும் இங்கும் ஷாட்டுகளை அடிக்க முயற்சித்தார். ஆனால் அவர் அவுட்டான ஷாட் நல்ல கனெக்ஷன் கொடுக்காமலேயே களத்திற்கு வெளியே அடிக்க வேண்டும் என்று முயற்சித்தது போல் இருந்தது”

இதையும் படிங்க: டி20 உ.கோ ஜெயிச்ச இந்திய அணியா இது? உண்மையான அழகும் சவாலும் அங்க காத்திருக்கு.. யுவராஜ் சிங்

“அப்படி அவர் சில பெரிய ஷாட்டுகளை தவற விட்டார். முதல் போட்டியிலும் கூட பந்தை களத்துக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று முயற்சித்தார். அப்படி அதிரடியாக அட்டாக் செய்து விளையாட விரும்பும் அவர் தன்னுடைய தடுப்பாட்டத்தை நம்பவில்லை. அதுவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவிடம் தற்போது இருக்கும் முக்கிய பிரச்சனையாகும்” என்று கூறினார்.

Advertisement