செயற்கையான பிட்ச்களில் இந்தியா இதை செய்வாங்க.. ஆனா ஆஸ்திரேலியா தான் ஜெய்க்கும்.. ஹைடன் கணிப்பு

Matthew Hayden
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. அத்தொடரில் இம்முறை எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி கங்கணம் கட்டியுள்ளது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2 தொடர்களில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக வெற்றிகளை பெற்று சாதனை படைத்தது.

அத்துடன் 2014 – 15க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஒரு முறை கூட இந்தியாவுக்கு எதிராக வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா திணறி வருகிறது. எனவே 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனல்களில் தோற்கடித்ததை போல இம்முறையும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் சமீபத்தில் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா வெல்லும்:

இந்நிலையில் இம்முறை என்ன தான் இந்தியா போராடினாலும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் கணித்துள்ளார். அதே சமயம் இந்தியா சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சவால் கொடுப்பதையும் பார்க்கலாம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று நான் சொல்வேன். அதே சமயம் வெற்றிக்காக இந்திய அணி சவால் கொடுக்கும் என்றும் நான் சொல்வேன். தற்போது ஆஸ்திரேலியாவில் தற்காலிகமாக பதியப்பட்ட பிட்ச்கள் (ட்ராப் இன்) இருக்கின்றன. அது முந்தைய இயற்கையான பிட்ச்களை விட சவாலாக இருக்கும். அதன் காரணமாக ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை அதிகமாக பெறும் என்று நான் கருதவில்லை”

- Advertisement -

செயற்கையான பிட்ச்கள்:

“ஆஸ்திரேலியாவில் பெர்த், அடிலெய்ட், மெல்போர்ன் ஆகிய மைதானங்களில் ட்ராப் இன் பிட்ச்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே பிரிஸ்பேன் மற்றும் சிட்னியில் மட்டுமே இயற்கையான ஆடுகளங்கள் இருக்கும். அங்கே 3, 5வது போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கே வித்தியாசமான கலவையுடன் விளையாட நேரிடலாம்”

இதையும் படிங்க: ரோஹித் நிச்சயமா இந்த விஷயத்துல சும்மா இருக்க மாட்டாரு.. கண்டிப்பா கம்பேக் இருக்கு – ரவி சாஸ்திரி கருத்து

“அப்படி மாறுபட்ட பிட்ச் சூழ்நிலைகள் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு சொந்த மண்ணில் அதிக சாதகம் இருக்கும் என்று நான் கருதவில்லை” எனக் கூறினார். அவர் கூறுவது போல தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணிலேயே இந்தியா தோற்றுள்ளது. அது போக காயத்தால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. ரோஹித், விராட் கோலி ஆகியோரும் நல்ல ஃபார்மில் இல்லை. எனவே இம்முறை ஆஸ்திரேலியா வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

Advertisement