அண்மையில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்து தோல்வி முகத்துடன் இந்தியா வந்தடைந்தது. அந்த வகையில் டாம் லேதம் தலைமையிலான இந்திய அணி இந்திய அணிக்கு எதிரான நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
மூன்றாவது போட்டியிலும் வில்லியம்சன் விளையாடமாட்டார் :
அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் இந்த தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ள வேளையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வரும் டிசம்பர் 1-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இதன் காரணமாக அந்த அணியின் வீரர்கள் தற்போது மும்பையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் இலங்கை தொடரின் போது அடைந்த காயம் காரணமாக இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கவில்லை.
இதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியான அறிக்கையின்படி இந்திய அணிக்கு எதிரான இந்த மூன்றாவது போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி கட்ட போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் அவரை இந்த போட்டியில் விளையாட வைத்து மீண்டும் அவருக்கு காயம் ஏற்பட்டால் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதனால் அவருக்கு இந்த மூன்றாவது போட்டியிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிட்ச் இந்த மாதிரி இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க பாவம்.. இந்திய பேட்ஸ்மேன்களுக்கு – ஹர்பஜன் ஆதரவு
இதன் காரணமாக இந்திய அணிக்கு எதிரான இந்த தொடரில் அவர் ஒரு போட்டியில் கூட விளையாட முடியாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் நியூசிலாந்து அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்று விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



