3 மேட்ச் தான் ஆடுனாரு.. அதுக்குள்ள 3 மாசம் ரெஸ்ட்டா? மாயங்க் யாத்விற்கு என்ன ஆச்சு? – விவரம் இதோ

Mayank-Yadav
- Advertisement -

டெல்லியை சேர்ந்த 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவ் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி நான்கு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இப்படி நான்கு போட்டியில் மட்டுமே அவர் விளையாடி இருந்தாலும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசுவதாலும் அதிக ரன்கள் விட்டுக் கொடுக்காமல் சிக்கனமாக வீசுகிறார் என்ற பாராட்டு பலரது மத்தியிலும் இருந்து வந்தது.

காயத்தில் சிக்கிய மாயங்க் யாதவ் :

இதன் காரணமாக விரைவில் அவருக்கு இந்திய அணியில் விளையாட இடம் கிடைக்க வேண்டும் என்று பேசப்பட்டு வந்த வேளையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

- Advertisement -

அதன்படி தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பில் அற்புதமாக செயல்பட்ட மாயங்க் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசிவந்த வேளையில் அடுத்தடுத்த தொடர்களில் அவருக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாகவும் அவர் தற்போது காயமடைந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் மாயங்க் யாதவிற்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதாக செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு குறைந்தது 3 மாதம் ஓய்வு தேவை என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாகவே அவரால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி எதிர்வரும் ரஞ்சி தொடரிலும் அவரால் விளையாட முடியாது என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி நான்கு போட்டியில் மட்டுமே விளையாடிய அவர் நேரடியாக இந்திய அணிக்கு வந்து தற்போது இந்திய அணிக்காகவும் மூன்று போட்டிகள் விளையாடிய பின்னர் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் வந்தாலே பெரிய மோதலே இந்திய அணிக்குள் வரப்போகுது – மனோஜ் திவாரி கருத்து

இப்படி தொடர்ச்சியாக அவர் காயம் அடையும் பட்சத்தில் அவரது கேரியர் மிகப்பெரிய பாதிப்பை காயத்தால் சந்திக்கும் என்ற அச்சம் உள்ளது. அதேவேளையில் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் முன்னர் நடைபெற இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement