எவ்ளோ பெரிய மாஸ்டரா இருந்தாலும் இதை செய்யலன்னா ஜெய்க்க முடியாது.. விராட், ரோஹித்துக்கு வெங்சர்கார் அறிவுரை

Dilip Vengsarkar
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் தோற்றுள்ள இந்தியா வரலாற்றிலேயே நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன் 12 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவமானத் தோல்வியையும் சந்தித்துள்ளது.

முன்னதாக இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான புனே பிட்ச்சில் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. குறிப்பாக பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 20 ரன்கள் கூட எடுக்கவில்லை. அவர்கள் சுமாராக பேட்டிங் செய்தது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது என்றே சொல்லலாம்.

- Advertisement -

மாஸ்டராக இருந்தாலும்:

இந்நிலையில் நீங்கள் எவ்வளவு அனுபவமிக்க மாஸ்டர் வீரராக இருந்தாலும் இந்தியாவில் ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொள்ள அவ்வப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார் தெரிவித்துள்ளார். எனவே இனிமேலாவது சூப்பர்ஸ்டார் என்று நினைக்காமல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு மரியாதை கொடுத்து விளையாடினால் மட்டுமே ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ள முடியும் என விராட் மற்றும் ரோஹித்துக்கு அவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடாத வரை உங்களால் ஸ்பின்னர்களுக்கு எதிராக மாஸ்டராக இருக்க முடியாது. சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுவதை மட்டும் நான் பேசவில்லை. பொதுவாகவே நல்ல சுழல் பந்துகளை எதிர்கொள்வதைப் பற்றி பேசுகிறேன். அதனாலேயே ஒவ்வொருவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவது முக்கியம்”

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட்டை மதிங்க:

“அதே போல சர்வதேச போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அண்டர்-19, இந்தியா ஏ அணிகள் விளையாடும் தொடர்களும் நடைபெறுகிறது. அது உள்ளூர் போட்டிகள் எந்தளவுக்கு முக்கியம் என்பதை காட்டுகிறது” என்று கூறினார். அத்துடன் இந்தியாவில் முதல் முறையாக வெற்றி பெற்ற நியூசிலாந்து அணிக்கு அவர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 10 தோல்விகள்.. இலங்கை வென்றாலும்.. 19 வருடத்துக்கு பின் சாதனை வெற்றி கண்ட வெஸ்ட் இண்டீஸ்

அவர் கூறுவது போல 2024 துலீப் கோப்பையில் காயமில்லாத பெரும்பாலான இந்திய வீரர்கள் விளையாடினார்கள். ஆனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா மட்டும் அந்தத் தொடரில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டவில்லை. மாறாக தங்களை சூப்பர் ஸ்டார்களாக நினைத்துக் கொண்ட அவர்கள் வலைப் பயிற்சிகளை மட்டும் எடுத்துக் கொண்டு நேரடியாக களமிறங்கினார்கள். அது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement