5 விக்கெட்ஸ்.. நம்புங்க ரோஹித் பாய்.. அஸ்வினுக்காக சர்பராஸ் அசத்தல்.. விமர்சித்தவர்களுக்கு சுந்தர் பதிலடி

Sundar 2
- Advertisement -

புனே நகரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துவங்கியது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்துக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்துக்கு கேப்டன் டாம் லாதமை 15 ரன்களில் அவுட்டாக்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்ததாக வந்த வில் எங்கையும் 18 ரன்களில் அவுட்டாக்கினார். குறிப்பாக அஸ்வின் வீசிய 24வது ஓவரில் வில் எங் கீப்பரிடம் எட்ஜ் கொடுத்தார். அதை ரிஷப் பண்ட் கச்சிதமாக பிடித்தும் வில் எங் எட்ஜ் கொடுத்தாரா என்ற சந்தேகத்துடன் இந்திய அணியினர் அவுட் கேட்டார்கள்.

- Advertisement -

நம்புங்க ரோஹித் பாய்:

அதற்கு நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். அதனால் ரிஷப் பண்ட், கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அவுட்டாக இருக்காது என்று கருதினர். ஆனால் ஷார்ட் லெக் பகுதியில் நின்று அதை சரியாக கவனித்த சர்பராஸ் கான் கண்டிப்பாக “இது அவுட் தான் என்னை நம்புங்கள் ரோஹித் பாய்” என்று சொல்லி ரிவியூ எடுக்க சொன்னார். அவர் பிடிவாதமாக உறுதியாக சொன்னதால் ரோஹித் சர்மாவும் நம்பி ரிவியூ எடுத்தார்.

அதை சோதித்த போது சர்பராஸ் சொன்னது போலவே வில் எங் எட்ஜ் கொடுத்ததால் இந்தியாவுக்கும் அஸ்வினுக்கும் விக்கெட் கிடைத்தது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மற்றொரு துவக்க வீரர் டேவோன் கான்வே நங்கூரமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்தரா ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

அசத்தும் தமிழக ஜோடி:

மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் கான்வேயை 76 ரன்களில் அஸ்வின் அவுட்டாக்கினார். ஆனாலும் மறுபுறம் ரவீந்திரா சதமடித்து இந்தியாவுக்கு பெரிய சவாலை கொடுத்தார். அப்போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அவரை 65 ரன்களில் மேஜிக் பந்தால் தடுப்பை உடைத்து போல்டாக்கி அடுத்து வந்த டாம் பிளன்டலையும் 3 ரன்களில் அவுட்டாக்கினார்.

இதையும் படிங்க: உச்சத்தில் இருந்தப்போ தோனி என்னோட கேரியரை முடிச்சிட்டாரு.. விவரத்தை அங்க சொல்றேன்.. மனோஜ் திவாரி

குறிப்பாக குல்தீப் யாதவுக்கு பதிலாக இப்போட்டியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சில விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு வாஷிங்டன் சுந்தர் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளார் என்றே சொல்லலாம். அதனால் இப்போட்டியில் முதல் நாள் தேநீர் இடைவேளையில் நியூஸிலாந்து 201-5 ரன்கள் எடுத்துள்ளது. அந்த 5 விக்கெட்டுகளை எடுத்து தமிழக வீரர்

Advertisement