கம்பீர் கண்ணை பாக்க முடியாம தலை குனிஞ்சு கைதட்ட வெச்சேன்.. சூர்யாகுமார் பற்றியும் சாம்சன் பேட்டி

Sanju Samson
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 2015இல் அறிமுகமானாலும் நிலையான வாய்ப்புகளை பெறாமல் தடுமாறி வந்தார். அதே சமயம் கிடைத்த வாய்ப்புகளையும் அவர் சரியாக பயன்படுத்தாததால் ஆதரவளித்த ரசிகர்களே ஏமாற்றத்தை சந்தித்தனர். அதன் உச்சமாக புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவருக்கு கடந்த இலங்கைத் தொடரில் பேட்டிங் வரிசையில் மேலே விளையாட வாய்ப்பு கொடுத்தார்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் கழற்றி விடப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு மீண்டும் கடந்த வங்கதேச தொடரில் கம்பீர் வாய்ப்பு கொடுத்தார். அந்த வாய்ப்பிலும் முதலிரண்டு போட்டியில் பெரிய ரன்கள் குவிக்காத சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் மூன்றாவது போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

கம்பீர் கொடுத்த வாய்ப்பு:

ஒரு வழியாக அந்த வாய்ப்பில் அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் விக்கெட் கீப்பராக சாதனை படைத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் நம்பி கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சிறப்பாக விளையாடத் தவறியதால் கௌதம் கம்பீர் கண்களை கூட தம்மால் தைரியமாக பார்க்க முடியவில்லை என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். ஆனால் கடைசியில் சதமடித்த போது அவரை பெருமையுடன் கைதட்ட வைத்ததாகவும் சாம்சன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “பயிற்சியாளர் மற்றும் வீரருக்கு இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம். பயிற்சியாளர் உங்களுடைய திறனை நம்பி வாய்ப்பு வழக்குகிறார். அந்த நம்பிக்கைக்கு நீங்கள் பாத்திரமாக செயல்பட விரும்புவீர்கள். அதை செய்த கம்பீர் பாய்க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் உங்களை நான் ஏமாற்ற மாட்டேன் என்பதை ஹைதராபாத்தில் காண்பிக்க முடிவெடுத்தேன்”

- Advertisement -

நண்பன் சூர்யகுமார்:

“வங்கதேச டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் நான் பெரிய ரன்கள் குவிக்காததால் அவருடைய கண்களை கூட பார்க்க தயங்கினேன். இருப்பினும் எனக்கான நேரம் வரும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அந்த வகையில் ஹைதராபாத்தில் நான் சதமடித்த போது பயிற்சியாளர் கைதட்டியது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சூரியகுமாரும் நானும் இளம் வயதில் இருந்தே ஒன்றாக விளையாடியுள்ளோம்”

இதையும் படிங்க: இந்தியா – நியூஸிலாந்து 2வது டெஸ்ட் நடைபெறும் புனே மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

“ஜூனியர் கிரிக்கெட்டில் பிபிசியில் அணிக்காக நாங்கள் விளையாடியுள்ளோம். எனவே எங்களுக்குள் நல்ல கனெக்சன் இருக்கிறது. எங்கள் ஆட்டத்தை ஒருவரை ஒருவர் தெரிந்து வைத்துள்ளோம். சூரியகுமார் கடினமாக உழைத்ததாலேயே இன்று அற்புதமான வீரராக வந்துள்ளார். தற்போது இந்தியாவை வழி நடத்தும் அவரின் மேல் மரியாதை அதிகரித்துள்ளது. அவர் என்னுடன் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்” என்று கூறினார்.

Advertisement