ஏற்கனவே 4 பேர் இருக்கும் வேளையில் 5 ஆவது ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட – என்ன காரணம்?

Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டது ஏன்? :

இந்த தொடரின் ஆரம்பத்திலேயே இந்திய அணி பெற்ற இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு ஆட்டங்களுக்கான இந்திய அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளரும், ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து தனது திறனை நிரூபித்த அவருக்கு கை மேல் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது ரசிகர்களின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கனவே இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்க ஐந்தாவதாக வாஷிங்டன் சுந்தரை சேர்த்தது ஏன்? என்ற கேள்வியும் எழுந்தது. அந்த வகையில் இந்திய அணியில் ஏற்கனவே ஜடேஜா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகிய நான்கு வீரர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஐந்தாவதாக வாஷிங்டன் சுந்தரையும் அணியில் சேர்த்தது கம்பீரின் முடிவு தான் என்று தெரிகிறது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் அஸ்வின் இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெறுவார் என்பதனால் அவருக்கு சரியான மாற்றுவீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் தற்போது இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அஸ்வினை போன்றே ஆப் ஸ்பின்னராக இருக்கும் வாஷிங்டன் சுந்தர் பேட்டெங்கிலும் கை கொடுக்கக் கூடியவர் என்பதனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

தொடர்ச்சியாக அவரை இந்திய டெஸ்ட் அணியில் வைத்து தயார் செய்யும் முனைப்பில் தான் தற்போது அவர் இந்திய அணியில் இணைக்கப்பட்டுள்ளார். பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் இந்திய அணியுடனே தொடர்ந்து பயணித்தால் அவருக்கு போதிய அனுபவம் கிடைக்கும் என்றும் அது தவிர்த்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

இதையும் படிங்க : 2024 வருடத்தில் 1 விக்கெட் கூட எடுக்காத சிராஜுக்கு பதில்.. அந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பளிங்க.. மனோஜ் திவாரி

ஒருவேளை அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட்டால் அவர் நிரந்தர வீரராக மாறும் வாய்ப்பும் இருக்கிறது. இதன் காரணமாகவே அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement