2024 வருடத்தில் 1 விக்கெட் கூட எடுக்காத சிராஜுக்கு பதில்.. அந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பளிங்க.. மனோஜ் திவாரி

Manoj Tiwary 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் கடைசி நாளில் 107 என்ற குறைவான இலக்கை இந்தியா கட்டுப்படுத்தியது.

அப்போது பிட்ச் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி பும்ரா – சிராஜ் ஆகியோருக்கு கேப்டன் ரோஹித் சர்மா வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு நிகராக பந்து வீசாத சிராஜ் விக்கெட் எடுக்காததால் இந்திய அணி எளிதாக தோற்றது. அதன் காரணமாக முகமது சிராஜ் அடுத்த போட்டியில் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

- Advertisement -

சுமாரான சிராஜ்:

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி மட்டுமன்றி இந்த வருடம் விளையாடிய அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் சிராஜ் 2வது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை என முன்னாள் வீரர் விமர்சித்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக கடந்த வங்கதேச தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். அல்லது வங்கதேச டி20 தொடரில் அறிமுகமாகி அசத்திய மயங் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மனோஜ் திவாரி பேசியது பின்வருமாறு. “நல்ல ரிதத்தில் உள்ள பவுலர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் விக்கெட்டுகளை எடுந்தால் அவர் தான் உங்களுடைய துருப்பச்சீட்டாக இருப்பார். அவருக்கு நீங்கள் அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த வருடம் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளின் 2வது இன்னிங்ஸில் சிராஜ் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை என்பது கவலைக்குரிய விஷயமாகும்”

- Advertisement -

ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு:

“எனவே அவருக்கு அணியில் ஓய்வு கொடுக்க வேண்டும். சில போட்டிகளில் ஓய்வெடுக்கும் போது சிராஜ் தன்னுடைய அடிப்படை மற்றும் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். நம்மிடம் நிறைய பேக்-அப் பவுலர்கள் உள்ளனர். வங்கதேசத்துக்கு எதிராக ஆகாஷ் தீப் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அதனால் அதிகப்படியான தன்னம்பிக்கையை கொண்டிக்கும் அவர் பெங்களூருவில் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் விளையாட மாட்டோம் என்று நினைத்திருக்கவே மாட்டார்”

இதையும் படிங்க: 106க்கு ஆல் அவுட்.. வங்கதேசத்தை தெறிக்க விட்ட ரபாடா.. ஸ்டைன், வகார் யூனிஸை முந்தி புதிய உலக சாதனை

“பிளேயிங் லெவனில் தனது பெயர் இல்லாததை பார்த்து அவர் ஆச்சரியமடைந்திருப்பார். அதே போல வங்கதேச டி20 தொடரில் அசத்திய மயங் யாதவ் பெங்களூருவில் தான் இருந்தார். அவரைப் போன்ற வீரர்களை தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் தோல்வியை சந்தித்ததால் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement