அவங்க 2 பேரை எதிர்த்து இந்திய மண்ணில் டெஸ்ட் விளையாடுவது உண்மையிலேயே கஷ்டம் தான் – ரச்சின் ரவீந்திரா அச்சம்

Rachin-Ravindra
- Advertisement -

அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது.

அவங்கள சமாளிப்பது ரொம்பவே கஷ்டம் :

இதன் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்க இருக்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக தற்போது இரு அணிகளும் பெங்களூரு வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய மண்ணில் தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களை வென்று ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணிக்கு எதிராக இந்தியா மண்ணில் விளையாடுவது என்பது எந்த ஒரு அணிக்குமே கடினமாக இருக்கும் வேளையில் நியூசிலாந்து அணிக்கும் இந்த விடயம் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நியூஸிலாந்து அணி சார்பாக விளையாட இருக்கும் இளம் ஆல்ரவுண்டான ரச்சின் ரவீந்திரா இந்த தொடர் குறித்து பேசுகையில் கூறியதாவது : இந்திய அணியில் நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் இருந்து பந்துவீசும் ஆற்றல் உடைய சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை சமாளிப்பது உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்று.

- Advertisement -

இருவருமே பல சாதனைகளை படைத்த பந்துவீச்சாளர்கள். சுழற்பந்துவீச்சில் அசத்தும் அவர்கள் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி தேவையான போது பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளவர்கள். எனவே அவர்கள் இருவரும் எங்களுடைய செயல்பாட்டை நிறுத்துற முயற்சிப்பார்கள். இருப்பினும் அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா மெகா ஏலத்திற்கு வந்தால் அவருடைய மொத்த மதிப்பு எத்தனை கோடி தெரியுமா? – அஷ்வின் கருத்து

இந்திய மண்ணில் நடைபெறும் ஆடுகளங்களில் அவர்கள் இருவரையும் அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது. அது எங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர்களின் ரெக்கார்டை பார்க்கும் போது அவர்கள் எப்படிப்பட்ட வீரர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்தியா போன்ற தரமான அணிக்கு எதிராக நாங்கள் சரியான திட்டங்களுடன் விளையாடினால் வெற்றி பெறுவோம் என ரச்சின் ரவீந்திரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement