இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரோகித் சர்மா கேப்டனாகவும், வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா துணைக்கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து தொடருக்கான மாற்று வீரர்கள் :
ரோகித் சர்மா தலைமையிலான இந்த இந்திய அணியில் 15 வீரர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அதே இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ள வேளையில் ஒரு வீரராக யாஷ் தயாளை மட்டும் அந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான டிராவலிங் ரிசர்வ் வீரர்களாக நான்கு மாற்று வீரர்களையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் தற்போது நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி விளையாடி வரும் நிதீஷ் ரெட்டி மற்றும் மாயங்க் யாதவ் ஆகியோருக்கு இந்த டிராவலிங் ரிசர்வ் வீரர்களில் மாற்று வீரர்களாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மேலும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி நான்கு வீரர்களுக்கு டிராவலிங் ரிசர்வ் வாய்ப்பு வழங்கப்பட்ட வேளையில் யாஷ் தயாளுக்கு இந்த மாற்று வீரர்களுக்கான பட்டியலில் கூட இடம் கொடுக்கப்படாதது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம்.
இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணிக்கெதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட இருக்கும் வேளையில் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நியூசிலாந்து அணிக்கெதிரான 15 பேர் கொண்ட முதன்மை அணி வீரர்கள் பட்டியல் இதோ :
இதையும் படிங்க : டீம்ல சேர்ப்பது மாதிரி சேர்த்து ஒரே டெஸ்ட் தொடருடன் கழட்டி விடப்பட்ட ஆர்.சி.பி வீரர் – அடப்பாவமே
1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) சர்பராஸ் கான், 8) துருவ் ஜுரேல், 9) ரவீந்திர ஜடேஜா, 10) ரவிச்சந்திரன் அஷ்வின், 11) குல்தீப் யாதவ், 12) அக்சர் படேல், 13) ஜஸ்ப்ரீத் பும்ரா (து.கேப்டன்), 14) முகமது சிராஜ், 15) ஆகாஷ் தீப்.
டிராவெலிங் ரிசர்வ் வீரர்கள் : ஹர்ஷித் ராணா, நிதீஷ் குமார் ரெட்டி, மாயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா.



