டீம்ல சேர்ப்பது மாதிரி சேர்த்து ஒரே டெஸ்ட் தொடருடன் கழட்டி விடப்பட்ட ஆர்.சி.பி வீரர் – அடப்பாவமே

Yash-Dayal
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் மூன்றாவது போட்டியானது இன்று அக்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்துடன் முடிவுக்கு வருகிறது.

ஒரே தொடரிலேயே கழட்டிவிடப்பட்ட இந்திய வீரர் :

இந்த தொடரினை ஏற்கனவே இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியும் விட்டது. இந்நிலையில் இந்த தொடருக்கு அடுத்ததாக இந்திய அணியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்கவுள்ள வேளையில் இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பிசிசிஐ-யின் மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் கடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் மாற்றமின்றி அப்படியே இடம் பிடித்திருக்கும் வேளையில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே நிகழ்ந்துள்ளது.

அந்தவகையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான 16 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் இந்த நியூசிலாந்து தொடருக்கான அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். கடந்த முறை 16 வீரர்களை கொண்டு அறிவிக்கப்பட்ட அணிக்கு பதிலாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் 15 வீரர்கள் மட்டுமே முதன்மை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

- Advertisement -

அதில் யாஷ் தயாளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய யாஷ் தயாள் பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்த வேளையில் அவருக்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் முதல்முறையாக இந்திய அணியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க : நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு – முழு லிஸ்ட் இதோ

அதே நேரத்தில் ஆகாஷ் தீப் இந்திய அணிக்காக அறிமுகமாகி மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராராக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரே போதும் என்று நினைத்துள்ள நிர்வாகம் தற்போது யாஷ் தயாளுக்கு வாய்ப்பு கொடுப்பது போல் கொடுத்து ஒரே தொடரோடு அணியிலிருந்து நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement