மலிங்கா, கேதர் யாதவ் போல முயற்சித்து பல்ப் வாங்கிய ரியான் பராக்.. 2.15 விதிமுறை மீறியதால் கிடைத்த தண்டனை

Riyan Parag
- Advertisement -

தலைநகர் டெல்லியில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற அபோட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 229-9 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் சேசிங் செய்த வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, நித்திஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் முதல் போட்டியின் வெற்றியையும் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை இந்தியா ஆரம்பத்திலேயே வென்றுள்ளது.

- Advertisement -

மலிங்கா போல:

முன்னதாக சமீபத்தில் இந்தியாவுக்காக இளம் வீரர் ரியான் பராக் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் கடந்த இலங்கை டி20 தொடரில் பந்து வீசிய அவர் சில விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் பங்காற்றினார். அதனால் இந்தப் போட்டியில் அவருக்கு கேப்டன் சூரியகுமார் பந்து வீசும் வாய்ப்பை வழங்கினார். அந்த வாய்ப்பில் ரியான் பராக் வீசிய 11வது ஓவரின் முதல் பந்திலேயே முகமதுல்லா சிக்ஸர் அடித்தார்.

அதன் காரணமாக வித்தியாசமாக பந்து வீச நினைத்த அவர் 4வது பந்தை வித்தியாசமான ஆக்சனை கொண்டு வீசினார். குறிப்பாக முன்னாள் வீரர்கள் கேதர் ஜாதவ் வீசக்கூடிய ரவுண்ட் ஆர்ம் மற்றும் லசித் மலிங்கா வீசக்கூடிய ஸ்லிங்கா ஆகிய 2 ஆக்சனும் கலந்த கலவையை போன்ற பந்தை ரியான் பராக் வீசினார். இருப்பினும் அவருடைய முயற்சியை கடைசியில் சொதப்பலாக அமைந்தது.

- Advertisement -

2.15 விதிமுறை:

ஏனெனில் வித்தியாசமாக அகலமாக வீச வேண்டும் என்று நினைத்த அவர் தனது ஒரு காலை பிட்ச்சுக்கு வெளியே பச்சைப் புற்கள் பகுதியில் வைத்து வீசினார். குறிப்பாக பந்து கையிலிருந்து வெளியே வரும் போது அவருடைய வலது கால் காற்றிலும் இடது கால் பிட்ச்சுக்கு வெளியே இருந்தது. ஆனால் 21.5 எம்சிசி விதிமுறைப்படி முன்னங்காலுக்கு பின்னே பின்னங்காலும் உன்றி பந்து வீச வேண்டும்.

இதையும் படிங்க: 2025 சவாலுக்கு ரெடியாகுங்க.. அவரால் மட்டுமே உங்களை அடக்க முடியும்.. ஜோ ரூட்டுக்கு மைக்கேல் வாகன் அட்வைஸ்

எனவே 2.15 விதிமுறையை மீறியதால் அது நோபால் என்று நடுவர் அறிவித்தார். அதனால் ஏமாற்றத்தை சந்தித்த ரியான் பராக் அடுத்த பந்தை வழக்கம் போல வீசினார். இருப்பினும் கடைசி பந்தில் மெஹதி ஹசன் விக்கெட்டை எடுத்த அவர் அந்த ஓவரை வெற்றிகரமாக முடித்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இத்தொடரின் மூன்றாவது போட்டி அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement