2வது போட்டியிலேயே ரோஹித்துக்கு பின் நிதிஷ் அபார சாதனை.. வேறு இந்திய வீரர்கள் செய்யாத தனித்துவ சாதனை

Nitish Reddy
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2வது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரை வென்றுள்ளது.

முன்னதாக தலைநகர் டெல்லியில் அக்டோபர் ஒன்பதாம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 221-9 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நித்திஸ் ரெட்டி 74 (34), ரிங்கு சிங் 53 (29) ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷாத் ஹுசைன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் சேசிங் செய்த வங்கதேசத்தை 135-9 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா எளிதாக வென்றது.

- Advertisement -

2வது இளம் ஆட்டநாயகன்:

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக முகமதுல்லா 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக நிதீஷ் ரெட்டி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 41-3 என இந்தியா சரிந்த போது 74 (34) ரன்கள் எடுத்த நித்திஷ் ரெட்டி பந்து வீச்சில் 4 ஓவரில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றினார். அதனால் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் அவர் அறிவிக்கப்பட்டார்.

இத்தனைக்கும் கடந்த போட்டியில் அறிமுகமான அவர் தனது 2வது போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது இளம் வயதில் ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் நித்திஷ் ரெட்டி படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா: 20 வருடம் 143 நாட்கள்
2. நித்திஷ் ரெட்டி: 21 வருடம் 136 நாட்கள்*
3. ரவி பிஸ்னோய்: 21 வருடம் 161 நாட்கள்

- Advertisement -

யாரும் செய்யாத சாதனை:

அத்துடன் சர்வதேச டி20 போட்டியில் 70க்கும் மேற்பட்ட ரன்களும் 2 விக்கெட்டுகளும் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் நித்திஸ் ரெட்டி படைத்துள்ளார். இந்த சாதனையை ஹர்திக் பாண்டியா, யுவராஜ் சிங் போன்ற மற்ற எந்த இந்திய வீரர்களும் படைத்ததில்லை. அதிகபட்சமாக 2012, 2016 ஆண்டுகளில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விராட் கோலி 70+ ரன்களுடன் 1 விக்கெட் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: யுவி, அகர்கருக்கு உதவிய இந்தியாவின் தங்கமான இதயம் ரத்னா டாடா.. ரோஹித், சச்சின், சேவாக் புகழஞ்சலி

அதே போல ஜாம்பவான் யுவராஜ் சிங் 2012ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 70+ ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் எடுத்துள்ளார். ஆனால் நிதிஷ் ரெட்டி மட்டுமே 70+ ரன்களுடன் 2 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக அசத்தியுள்ளார். அந்த வகையில் இந்திய அணிக்கு மற்றும் ஒரு இளம் ஆல் ரவுண்டர் கிடைக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement