ருதுராஜ்க்கு டாட்டா.. 2 தமிழக வீரர்கள், 155கி,மீ புயலுக்கு இடம்.. வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணி இதோ

Indian Team
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதைத்தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி முதல் துவங்க உள்ள அந்தத் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் ரிஷப் பண்ட், சுப்மன் கில் ஆகியோருக்கு இடம் கிடைக்காது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது. அதே போல ஜெய்ஸ்வால் தேர்ந்தெடுக்கப்படாததால் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. அவர்களுக்கு பதிலாக கடந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி அசத்திய அபிஷேக் ஷர்மா துவக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

வங்கதேச தொடர்:

அதே போல இஷான் கிசான் கழற்றி விடப்பட்டு விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா, ரியன் பராக், ரிங்கு சிங், கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அசத்திய நித்திஷ் ரெட்டி, சிஎஸ்கே நம்பிக்கை நட்சத்திரம் சிவம் துபே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதே போல ஸ்பின்னர்களாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் சக்கரவர்த்தி 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் சுமார் 3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்துள்ளார். குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா கோப்பையை வெல்வதற்கு உதவிய அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கொண்டு வந்துள்ளார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

இந்திய அணி:

அத்துடன் வேகப்பந்து வீச்சு துறையில் அர்ஷ்தீப் சிங், மயங் யாதவ், ஹர்ஷித் ராணா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமான மயங் யாதவ் தொடர்ந்து 155கி.மீ வேகத்தில் வீசி தனது முதலிரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இருப்பினும் அதன் பின் காயமடைந்த அவர் தற்போது குணமடைந்துள்ளதால் இந்தியாவுக்காக முதல் முறையாக தேர்வாகியுள்ளார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025 சகாப்தம் : 1.05 கோடி..7.5 லட்சம்.. வீரர்களுக்கு புதிய போனஸ் சம்பளத்தை அறிவித்த ஜெய் ஷா

ஆனால் இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளது பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்திய அணி: சூரியகுமார் யாதவ் (கேப்டன்) அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், நித்திஷ் ரெட்டி, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஸ்னோய், வருண் சக்கரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா (கீப்பர்), அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங் யாதவ்

Advertisement