அந்த 2 வீரர்கள் இல்லாம இந்தியா விளையாட முடியாது.. பாகிஸ்தான் பிசிசிஐ பாத்து இதை கத்துக்கனும்.. கம்ரான் அக்மல்

Kamran akmal 2
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 1 – 0* (2) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. முன்னதாக சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் முதல் முறையாக தோற்கடித்து வங்கதேசம் வரலாறு படைத்தது.

அதே போல இந்தியாவையும் அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ சவால் விடுத்திருந்தார். ஆனால் செயலில் கில்லியாக செயல்பட்ட இந்தியா மூன்றரை நாட்களில் வங்கதேசத்தை சுருட்டி வெற்றி பெற்றது. அதனால் நாங்கள் பாகிஸ்தான் கிடையாது என்பதை வங்கதேச அணிக்கு இந்திய அணி முதல் போட்டியிலேயே காண்பித்தது.

- Advertisement -

பாகிஸ்தான் கத்துக்கணும்:

இந்நிலையில் பிசிசிஐ மற்றும் இந்திய அணியை பார்த்து பாகிஸ்தான் மற்றும் பிசிபி கற்றுக்கொள்ள வேண்டும் என அந்நாட்டின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் சாடியுள்ளார். அத்துடன் அஸ்வின் மற்றும் ஜடேஜா இல்லாமல் சொந்த மண்ணில் இந்திய அணியால் விளையாட முடியாது என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“பிசிசிஐயின் தொழில்முறை, தேர்வாளர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை பார்த்து பிசிபி கற்றுக்கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் தான் இந்தியாவை நம்பர் ஒன் அணியாக முன்னேற்றி உலக கிரிக்கெட்டை டாமினேட் செய்ய வைக்கிறது. மறுபுறம் உங்களுடைய ஈகோவால் தான் பாகிஸ்தான் அணி பாதிப்புகளை சந்திக்கிறது”

- Advertisement -

அஸ்வின் – ஜடேஜா இல்லாமல்:

“வங்கதேச போட்டியில் அஸ்வினிடமிருந்து என்ன ஒரு அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடு வந்தது. முதலில் சதமடித்த அவர் 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் எடுத்தார். ஜடேஜாவுடன் அவர் மேட்ச் வின்னிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இந்த 2 வீரர்கள் இல்லாமல் இந்தியா தங்களது சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அமைக்க முடியாது”

இதையும் படிங்க: தோனியின் 6 சதங்கள் இதுக்கு ஈடாகுமா.. ரிஷப் பண்ட் தான் இந்தியாவின் சிறந்த கீப்பர்.. ஆகாஷ் சோப்ரா

“அவர்கள் தான் இந்தியாவின் வெற்றிக்கான சாவியாக இருக்கிறார்கள். அதே போல ரிசப் பண்ட் அற்புதமாக செயல்பட்டார். காயத்திலிருந்து குணமடைய வைத்து மீண்டும் அவரை களத்திற்கு கொண்டு வந்த மருத்துவக் குழுவினர் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement