இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் நிலையான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். கடைசியாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடிய அவர் காயமடைந்து குணமடைந்த போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதை கேட்காததால் இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
அதன் பின் ஐபிஎல் 2024 கோப்பையை கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வென்றார். அதனால் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் மீண்டும் அவரை இலங்கைத் தொடரின் வழியாக இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் கம்பேக் கொடுக்க 2024 துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
சொதப்பிய ஸ்ரேயாஸ்:
அந்த வாய்ப்பில் முதல் ரவுண்டில் அரை சதம் மட்டுமே அடித்த அவர் 2வது ரவுண்டில் டக் அவுட்டானார். குறிப்பாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு களமிறங்கிய அவர் பரிதாபமாக அவுட்டானது ரசிகர்களால் கிண்டலடிக்கப்பட்டது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடிய முதல் 2 ரவுண்ட் போட்டிகளிலும் பரிதாபமாக தோற்ற இந்தியா டி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே கோட்டை விட்டது.
அதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி இந்தியா பி மற்றும் டி அணிகள் மோதும் கடைசி ரவுண்டு போட்டி அனந்தபூரில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா டி அணி 349 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் சதமடித்து 106 (101) ரன்கள் எடுத்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டானார். அதனால் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கான வாய்ப்பு முடிந்ததாகவே பார்க்கப்படுகிறது.
எண்டே கிடையாது:
ஏனெனில் ஏற்கனவே சர்பராஸ் கான், துருவ் ஜுரேல் ஆகிய இளம் வீரர்கள் இங்கிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடியும் தற்போதைய வங்கதேச தொடரில் இடமில்லாமல் பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர். தொடர்ந்து நடைபெற்ற அப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா டி அணிக்கு தேவ்தூத் படிக்கல் 3, கேஎஸ் பரத் 2, நிஷாந்த் சிந்து 5 ரன்களில் அவுட்டானார்கள்.
இதையும் படிங்க: சுப்மன் கில் ஸ்பெஷல் இதுதான் கவனிச்சீங்களா? துணைக்கேப்டன் பதவி சீக்கிரம் கெடச்சிடும் போலயே – விவரம் இதோ
அதனால் 18-3 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் அரை சதமடித்தார். அதே வேகத்தில் விளையாடிய அவர் 7 பவுண்டரி 1 சிக்ஸருடன் 50 (40) ரன்களை 125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அதனால் எனக்கு எண்டே கிடையாது என்ற வகையில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் டெஸ்ட் அணியில் இல்லாவிட்டாலும் அடுத்து நடைபெறும் வங்கதேச டி20 தொடரில் வாய்ப்பு கொடுக்குமாறு பிசிசிஐக்கு அடி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



