ராகுல் டிராவிடுக்கு அடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது இந்திய வீரராக சுப்மன் கில் – நிகழ்த்தியுள்ள சாதனை

Gill-and-Dravid
- Advertisement -

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த வேளையில் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணி வெற்றி உறுதியாகிவிட்டது என்றே கூறலாம். அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.

டிராவிடின் சாதனையை சமன் செய்த் சுப்மன் கில் :

ஏனெனில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணியானது தங்களது முதலில் இன்னிங்சில் 376 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 149 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

அதனை தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது அசத்தலான சதத்தால் 4 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு 515 ரன்கள் என்கிற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தில் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய வங்கதேச அணி ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை எழுந்து 158 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது. ஆனால் எஞ்சியுள்ள 6 விக்கெட்டுகளையும் இந்திய அணி நாளை காலையில் விரைவில் வீழ்த்திவிடும் என்பதனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த சுப்மன் கில் இரண்டாவது இன்னிங்ஸில் 176 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸர் 10 பவுண்டரி என 119 ரன்கள் குவித்து அட்டகாசப்படுத்தினார். அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிடின் சாதனை ஒன்றினையும் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : எனக்கு எண்டே கிடையாது.. 125 ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடி.. வங்கதேச டி20 தொடருக்கு அடிபோடும் ஸ்ரேயாஸ் ஐயர்

அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 35 டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது வீரராக களமிறங்கி ராகுல் டிராவிட் மட்டுமே சதம் அடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் களமிறங்கிய சுப்மன் கில் சேப்பாக்கம் மைதானத்தில் டிராவிடுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் களமிறங்கி சதம் அடித்து அவரின் இந்த சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement