அஸ்வின் மாதிரியான அந்த 3 வீரர்களோட அருமை ரிட்டையரான அப்றம் தான் இந்தியாவுக்கு தெரியும்.. டிகே பாராட்டு

Dinesh Karthik
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 376 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

அப்போது நிதானமாக விளையாட முயற்சித்த ஜெய்ஸ்வால் 56, ரிஷப் பண்ட் 39 ரன்களில் போராடி அவுட்டானார்கள். அதனால் 144-6 என தடுமாறிய இந்திய அணியை மிடில் ஆர்டரில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஜோடி சேர்ந்து 7வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்தினார்கள்.

- Advertisement -

ஓய்வு பெற்ற பின்:

அதில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சொந்த ஊரில் அதிகபட்சமாக சதமடித்து 113 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 86 ரன்களும் குவித்து தங்களுடைய தரத்தை நிரூபித்தார்கள். வங்கதேச அணி சார்பில் அதிகபட்சமாக ஹசன் மஹ்முத் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் போன்ற ஆல் ரவுண்டர்களின் அருமை அவர்கள் ஓய்வு பெற்ற பின்வே இந்தியாவுக்கு தெரியும் என தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

ஏனெனில் கடந்த பல வருடங்களாக இப்படி டாப் ஆர்டர் சரியும் போதெல்லாம் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் முக்கிய ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றியதாகவும் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. அனுபவத்தைக் கொண்டுள்ள அவர்கள் சிறப்பாகத் துவங்கினர்”

- Advertisement -

தினேஷ் கார்த்திக் பாராட்டு:

“அஸ்வின் முதலில் பேக் ஃபுட் பன்ச் அடித்தார். ஜடேஜா மிட் ஆன் திசையில் பவுண்டரிகளை அடித்து அசத்தினார். அந்த வகையில் சிங்கிள் மற்றும் பவுண்டரிகளை அடித்து பேட்டிங் செய்த அவர்கள் தங்களுடைய அரை சதத்தை கடந்த பின் இன்னும் கச்சிதமான சூப்பர் ஷாட்டுகளை விளையாடினர். நம்மிடம் இப்போட்டியில் விளையாடாத அக்சர் படேல் போன்ற சில ஆல் ரவுண்டர்கள் உள்ளனர்”

இதையும் படிங்க: 144/6 டூ 376.. இந்திய மண்ணில் வரலாறு படைத்த வங்கதேச பவுலர்.. 53 வருடத்துக்கு பின் இந்தியா அபார கமபேக்

“சில நேரங்களில் அவர்கள் அருகில் இல்லாத போது தான் மக்கள் அவர்களுடைய மதிப்பை உணர்வார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அஸ்வின், ஜடேஜா இருவரும் தாங்கள் செய்ததை விட மதிப்புமிக்கவர்கள். இந்திய அணிக்காக அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக செயல்படுகின்றனர்” என்று கூறினார். அந்த வகையில் 36 வயதை கடந்து விட்ட அஸ்வின், ஜடேஜா இன்னும் ஓரிரு வருடங்களில் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement