இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் ஏற்கனவே சென்னை வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அக்சர் படேலுக்கு இருக்கும் தனித்துவம் :
அதோடு அண்மையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணியானது அங்கு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளதால் அதே நம்பிக்கையுடன் இந்திய அணியையும் எதிர்கொள்ள காத்திருக்கிறது.
தற்போதைய வங்கதேச அணி மும்பை காட்டிலும் பலமாக இருப்பதால் அவர்கள் சற்று சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. அதே வேளையில் இதுவரை வங்கதேச அணியிடம் டெஸ்ட் போட்டியில் தோற்காத இந்திய அணி தங்களது கௌரவத்தை நிலை நாட்டும் வகையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த சேப்பாக்கம் மைதானத்தில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முதல் இரண்டு முதன்மை சூழற்பந்து வீச்சாளராக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடுவது உறுதியாகி உள்ளது.
இவ்வேளையில் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக விளையாட அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவுகிறது. ஆனாலும் இதில் அக்சர் பட்டேலின் கையே ஓங்கியுள்ளது என்று கூறலாம். ஏனெனில் குல்தீப் யாதவ் முழுநேர பந்துவீச்சாளர் மட்டுமே அவரால் பேட்டிங்கில் பெரிய அளவில் கைகொடுக்க முடியாது. ஆனால் அக்சர் பட்டேல் சுழற்பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவரால் பெரிய அளவு கைகொடுக்க முடியும்.
இதையும் படிங்க : இலவசமா கொடுக்குறாரு.. ரிஸ்வான் – ரிஷப் பண்ட் ஆகியோரில் சிறந்த கீப்பர் பேட்ஸ்மேன் பற்றி டேனிஷ் கனேரியா
குறிப்பாக அக்சர் பட்டேலால் தேவைப்படும் போது டாப் ஆர்டர், மிடில் ஆர்டர், பின் வரிசை என எங்கு வேண்டுமானாலும் விளையாட முடியும். அதோட அவருக்கு நிறைய ரன்கள் அடிக்கும் தகுதியும் உள்ளதால் குல்தீப் யாதவை தாண்டி அவரே பிளேயிங் அவனில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.



