இவ்ளோ பெரிய விராட் கோலி.. என்னோட தலைமையில் விளையாடியதை ஏன் பேசல? பிரபல கட்சி சேர்மேன் பேட்டி

Tejashvi Yadav
- Advertisement -

டெல்லியை சேர்ந்த விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்ற அவர் அதே வருடம் சீனியர் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் தோனியின் ஆதரவுடன் குறுகிய காலத்திலேயே அசத்த துவங்கிய அவர் கடந்த 16 வருடங்களில் 26000க்கும் மேற்பட்ட ரன்களையும் 80 சதங்களையும் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும் 2017 – 2021 வரை முழு நேர கேப்டனாகவும் செயல்பட்ட அவருடைய தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

அரசியல்வாதி ஆதங்கம்:

அத்துடன் ஃபிட்னஸ்க்கு அடையாளமாக திகழும் விராட் கோலி இந்தியா மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் வீரராக வலம் வருகிறார். இந்நிலையில் இன்று இந்தளவுக்கு பெரிதாக வளர்ந்துள்ள விராட் கோலி ஒரு காலத்தில் தம்முடைய தலைமையில் விளையாடியவர் என்பதை யாரும் பேசுவதில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் சேர்மன் தேஜஸ்வி யாதவ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஜீ தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஒரு கிரிக்கெட்டர். ஆனால் அதைப் பற்றி யாருமே பேசுவதில்லை. விராட் கோலி என்னுடைய கேப்டன்ஷிப் தலைமையில் விளையாடினார். இதைப்பற்றி யாராவது பேசினீர்களா? ஏன் அதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. தொழில் முறையில் நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளேன்”

- Advertisement -

உண்மையா உருட்டா:

“இந்திய அணியில் தற்போதுள்ள பெரும்பாலானவர்கள் ஒரு கட்டத்தில் என்னுடைய சக வீரர்கள். இருப்பினும் என்னுடைய இரண்டு தசை நார்களும் காயமடைந்ததால் நான் கிரிக்கெட்டில் இருந்து விலகினேன். அது அப்படியே இருக்கட்டும்” என்று கூறினார். இந்த கருத்தை பார்க்கும் இந்திய ரசிகர்கள் நீங்கள் யார்? ட்ரீம் லெவன் அணியில் விராட் கோலியின் கேப்டனாக இருந்தீர்களா? என்று சமூக வலைதளங்களில் பதிலளித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: 5வது நாள் செஷன்.. ரேக்கிங் பாத்துட்டு சும்மா விளையாட வரல.. இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி சான்டோ

உண்மையில் ஜார்க்கண்ட் அணிக்காக 2 லிஸ்ட் ஏ மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தேஜாஸ்வி 37 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்துள்ளார். அதே போல ஐபிஎல் தொடரில் 2008 – 2012 வரை டெல்லி அணிக்காக வாங்கப்பட்ட அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வகையில் சாதாரண வீரராக சுமாராகவே விளையாடிய அவர் எப்போது விராட் கோலியின் கேப்டனாக இருந்தார் என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.

Advertisement