ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்சினைகளால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு எந்த வெளிநாடுகளும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. அதனால் ஆப்கானிஸ்தான் தங்களுடைய சொந்த மண் போட்டிகளில் இந்தியாவில் விளையாடுவதற்கு பிசிசிஐ உதவி செய்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் விளையாடிய அப்போட்டி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி கிரேட்டர் நொய்டாவில் துவங்கியது.
இருப்பினும் செப்டம்பர் எட்டாம் தேதி அங்கே பெய்த பலத்த மழையால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. ஆனால் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் மழை பெய்யாத போதும் மைதானத்திலிருந்த தண்ணீரை வேகமாக வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளும் எந்திரங்களும் இல்லை. அதனால் பராமரிப்பாளர்கள் வாலியில் தண்ணீரை பிழிந்து எடுத்தும் மின்சார காற்றாடிகளை பயன்படுத்தியும் மைதானத்தை உலர வைக்க முயற்சித்தனர்.
26 வருட பரிதாபம்:
ஆனாலும் அதிகப்படியான மழை பெய்ததால் 2 நாட்களாகியும் போட்டியை துவங்க முடியவில்லை. அதனால் உலகின் பணக்கார வாரியமான பிசிசிஐ ஆப்கானிஸ்தானுக்கு இப்படி ஒரு சுமாரான மைதானத்தை கொடுக்கலாமா என்ற விமர்சனங்கள் இருந்தன. மறுபுறம் இதை விட சிறந்த வசதிகளை கொண்ட மைதானம் தங்கள் நாட்டில் இருப்பதாக ஆப்கானிஸ்தான் வாரியம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அதே சமயம் நொய்டா, பெங்களூரு மற்றும் கான்பூர் மைதானங்களை பிசிசிஐ கொடுத்ததாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. இருப்பினும் பயண வசதிகளுக்காக தாங்கள் தான் கிரேட்டர் நொய்டா மைதானத்தை தேர்ந்தெடுத்ததாக ஆப்கானிஸ்தான் வாரியம் விளக்கம் கொடுத்தது. அந்த நிலையில் செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளைத் தொடர்ந்து செப்டம்பர் 13ஆம் தேதியன்றும் கிரேட்டர் நொய்டாவில் இடையிடையே மழை பெய்தது.
91 வருட இந்தியாவில்:
அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆம் நூற்றாண்டில் முதல் முறையாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட போட்டியாக ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து போட்டி பரிதாப சாதனை படைத்துள்ளது. கடைசியாக கடந்த 1998ஆம் ஆண்டு டுனிடின் நகரில் நடைபெற்ற நியூசிலாந்து – இந்தியா அணிகள் மோதிய போட்டி இதே போல ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: என்ன நடந்தாலும் அந்த மாற்றம் எங்களது அணியில் இருக்காது.. இந்திய அணிக்கெதிரான தொடர் குறித்து – ஆஸி கோச் பேட்டி
அத்துடன் இந்தியாவில் 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்படுவதும் இதுவே முதல் முறையாகும். கடந்த 1933 முதல் இதற்கு முன் இந்தியாவில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. மேலும் ஒட்டுமொத்த வரலாற்றில் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 8வது போட்டியாகவும் 2025 ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி பதிவாகியுள்ளது.



