எனக்கு குடுத்த வாக்குறுதியை ரிஷப் பண்ட் காப்பாற்றிவிட்டார்.. தோனியை மிஞ்சிட்டாரு – ரிக்கி பாண்டிங் புகழாரம்

Ponting
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியாமல் பின்னடைவை சந்தித்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்த நிலையில் படிப்படியாக மீண்டு வந்த அவர் தற்போது சர்வதேச போட்டிகளுக்கு திரும்பியுள்ளார்.

கொடுத்த வாக்கை காப்பாற்றிவிட்டார் :

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்ற ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்ததோடு அதிக ரன்களை அடித்த டெல்லி வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தி இருந்தார். அவர் சாலை விபத்தில் சிக்கிய போது இனி அவர் கிரிக்கெட் விளையாடுவது கடினம் என்று பலராலும் பேசப்பட்ட வேளையில் அது எல்லாம் தவிடு பொடியாக்கி தற்போது மீண்டும் பழைய பலத்துடன் திரும்பி வந்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் டி20 உலக கோப்பை அணியிலும் இடம் பெற்றிருந்த அவர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பெற்றிருந்தார். இப்படி அடுத்தடுத்து இந்திய அணியில் விளையாடி வரும் அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க இருக்கிறார். இந்நிலையில் ரிஷப் பண்ட் மீண்டு வந்த விதம் குறித்து பேசியுள்ள டெல்லி அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் கூறுகையில் :

ரிஷப் பண்ட் மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பி வந்திருப்பது கிட்டத்தட்ட ஒரு மறுபிரவேசம் தான். ஏனெனில் அவர் சாலை விபத்து சிக்கிய கதைகளை கேட்டால் மன வருத்தம் மட்டுமே இருக்கும். அந்த அளவிற்கு அவர் வலியை அனுபவித்துள்ளார். நான் இந்த ஆண்டும் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்தான் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் 12 மாதங்களுக்கு முன்பாக அவர் என்னிடம் ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தார். அதாவது நான் நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்றும் கண்டிப்பாக என்னுடைய பெஸ்ட்டை கொடுப்பேன் என்றும் கூறியிருந்தார். அதன் காரணமாக நான் அவரை பேட்டிங் மட்டும் செய்ய வைத்து இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் கேப்டனாக பொறுப்பேற்றது மட்டுமின்றி விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு பேட்ஸ்மேனாகவும் செயல்பட்டார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் எதிர்கால கேப்டன்கள் அவர்கள் 2 பேரில் ஒருவர் தான் – தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கணிப்பு

இப்படி அவரது இந்த செயல்பாட்டுக்கு காரணம் அவருடைய மன உறுதி தான். தற்போது டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கும் அவர் நிச்சயம் தோனியை மிஞ்சி விட்டதாகவே கருதுகிறேன். ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் தோனி 90 போட்டிகளில் விளையாடி ஆறு சதங்களை மட்டுமே அடித்துள்ளார். ஆனால் தற்போது மிகக் குறுகிய அளவிலான டெஸ்ட் போட்டிகளிலேயே கிட்டத்தட்ட ஐந்து சதங்களை தவற விட்டுள்ளார். அதோடு மறக்க முடியாத பல சிறந்த இன்னிங்ஸ்களையும் அவர் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement