என்னோட 800 விக்கெட்ஸ் சாதனையை யாராலும் உடைக்க முடியாது.. வருத்தமான காரணம் இது தான்.. முரளிதரன் பேட்டி

Muttiah Muralitharan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் அதிக ரன்களை எடுத்து யாராலும் தொட முடியாத உலக சாதனை படைத்துள்ளார். அதே போல இலங்கையின் முத்தையா முரளிதரன் அதிக விக்கெட்டுகள் எடுத்து எவராலும் எளிதில் தொட முடியாத உலக சாதனையை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவருடைய உலக சாதனையை யாராலும் உடைக்க முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் நவீன கிரிக்கெட்டில் டி20 போட்டிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதற்கிடையே ஐபிஎல் போல ஒவ்வொரு நாட்டிலும் தனித்தனியே பிரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்படுகிறது. அதில் வெறும் 2 மாதங்கள் விளையாடுவதற்கு கோடிக் கணக்கில் சம்பளங்கள் கொடுக்கப்படுகிறது.

- Advertisement -

800 விக்கெட் சாதனை:

அதனால் இப்போதுள்ள பெரும்பாலான வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து 35 வயதுகுள்ளேயே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள் அல்லது புறக்கணிக்கிறார்கள். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (800) எடுத்துள்ள தம்முடைய சாதனையை யாராலும் உடைக்க முடியாது என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஏனெனில் ஒவ்வொரு நாடும் வருடத்திற்கு 6 – 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் டி20 போட்டிகள் அதிகம் வந்து விட்டதால் கிரிக்கெட்டை ரசிகர்கள் அதிகம் பார்ப்பதில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். அதே போல டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய டெஸ்ட் கேரியரை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் முரளிதரன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

முரளிதரன் வருத்தம்:

இது பற்றி டெய்லி மெயில் பத்திரிகையில் அவர் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் கிரிக்கெட்டை பற்றி நான் கண்டிப்பாக கவலைப்படுகிறேன். இப்போதெல்லாம் ஒவ்வொரு நாடும் 6 – 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடலாம். பல நாடுகளில் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை பார்ப்பதே இல்லை. இங்கே குறைவான டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடைபெறுகிறது. எனவே அந்த சாதனையை ஒருவர் உடைப்பது மிகவும் கடினம்”

இதையும் படிங்க: நான் சிறுவயதில் பயிற்சி முடிந்த பின்னர் அந்த 2 விஷயத்திற்காக காத்திருப்பேன் – ராகுல் டிராவிட் வெளிப்படை

“ஏனெனில் தற்போது கிரிக்கெட் என்பது ஷார்ட் ஃபார்மை நோக்கி நகர்ந்துள்ளது. எங்கள் காலத்தில் நாங்கள் 20 வருடங்கள் விளையாடினோம். ஆனால் இப்போதுள்ள வீரர்களின் கேரியர் குறைந்துள்ளது. இங்கே தொடர்ந்து யாரும் விளையாடுவதில்லை என்பது பிரச்சினையாகும். அனைத்து வீரர்களிடமும் திறமை இருந்தாலும் அவர்களால் அனுபவத்தை பெற முடியுமா? அதிக தொடர்கள் நடைபெறும் இந்த காலத்தில் அது கடினம்” என்று கூறினார்.

Advertisement