இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளான ராகுல் டிராவிடின் தலைமையின் கீழ் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அண்மையில் நடைபெற்ற முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து தான் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று அறிவித்து இந்திய அணியில் இருந்து ராகுல் டிராவிட் வெளியேறினார். அதன் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து இந்திய அணி ஐசிசி கோப்பை கைப்பற்றி இருந்தது.
சிறுவயதில் நான் பட்ட கஷ்டம் :
தற்போது பயிற்சியாளர் பதவியில் இருந்து அவர் விலகி இருந்தாலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அது தவிர்த்து தற்போது இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் முக்கிய கிரிக்கெட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ராகுல் டிராவிட் தனது கரியரில் தான் சந்தித்த பல்வேறு விடயங்கள் குறித்த வெளிப்படையாக பேசி வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற மவுண்ட் ஜாய் கிரிக்கெட் கிளப்பின் 50-வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட டிராவிட் தனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் தான் சந்தித்த நிலை குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போது இந்தியா முழுவதும் இருந்து திறமையான வீரர்கள் கொண்டுவரப்படுகிறார்கள்.
ஆனால் நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய நகரங்களில் இருந்து மட்டும்தான் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடுவார்கள். சிறிய கிராமங்களிலோ, சிறிய நகரங்களிலிருந்து திறமையான வீரர்கள் இருந்தாலும் அவர்களால் பெரிய அளவில் முன்னேறி வர முடியாது. ஆனால் இன்று இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிறிய கிராமங்களில் இருந்தும் கூட வீரர்கள் வர துவங்கியுள்ளார்கள்.
இப்படி வீரர்கள் வருவது இந்திய அணிக்கு நல்லது. அதோடு தற்போது கிரிக்கெட் தான் சக்தி வாய்ந்த ஒரு விளையாட்டாக மாறி வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் இன்று கிளப்புகள் அமைக்கப்பட்டு வலுவாக பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருவது மகிழ்ச்சி. நாங்கள் விளையாடிய காலத்தில் பயிற்சி முடிந்த பின் இரண்டு முட்டை மற்றும் ஒரு கிளாஸ் பாலும் வழங்கப்படும் அதற்காக நான் தினமும் காத்திருப்பேன்.
இதையும் படிங்க : நம்பலனாலும் நிஜம்.. தார் ரோட் ஃபிட்ச்சில் கூட பும்ரா விக்கெட் எடுப்பாரு.. காரணம் இது தான்.. பசித் அலி
அதற்கு காரணம் அதை சாப்பிடுவதற்காக மட்டுமல்ல. அந்த நேரத்தில் சில அனுபவ வீரர்கள் எங்களுடன் அமர்ந்து கிரிக்கெட் குறித்து பல்வேறு விடயங்களை பேசுவார்கள். அந்த பேச்சுகளை கேட்பதற்காகவும் கிரிக்கெட்டை முறைப்படி கற்றுக் கொள்வதற்காகவும் தான் நான் அந்த இரண்டு முட்டை மற்றும் ஒரு கிளாஸ் பால் கொடுக்கும் நேரத்திற்காக காத்திருப்பேன் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.



