இதை ஏன் 6 மாசம் முன்னாடி சொல்லல.. சாஸ்திரியின் ஐடியாவை காப்பியடியத்த வாகனுக்கு வாசிம் ஜாபர் பதிலடி

Wasim Jaffer
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் எதிர்பார்த்ததைப் போலவே கொஞ்சம் பலவீனமான இலங்கையை தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இங்கிலாந்து தோற்கடித்துள்ளது. அதனால் 2 – 0 (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே அத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஸ் புள்ளிப்பட்டியலில் 45% புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உள்ள அணிகளை 2 பிரிவுகளாக பிரிக்க வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அதாவது இங்கிலாந்து – இலங்கை, இந்தியா – வங்கதேசம் போன்ற அணிகளில் ஒன்று பலவீனமாக இருக்கிறது. எனவே அந்த அணிகள் மோதும் போட்டிகள் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவதில்லை.

- Advertisement -

ரவி சாஸ்திரி ஐடியா:

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரத்தையும் ஆர்வத்தையும் உருவாக்க இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற அணிகளை ஒரு பிரிவாகவும் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் போன்ற அணிகளை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கலாம் என்று ரவி சாஸ்திரி சமீபத்தில் கூறியிருந்தார். அந்த அணிகள் மோதும் போது தரமும் டெஸ்ட் கிரிக்கெட்டை ரசிகர்கள் பார்க்கும் ஆர்வமும் அதிகரிக்கும் என்று ரவி சாஸ்திரி ஐசிசிக்கு ஆலோசனை கூறியிருந்தார்.

தற்போது அதே கருத்தை மைக்கேல் வாகன் காப்பியடித்தது போல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் தொடர் தரமாக இல்லையென்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். எனவே டெஸ்ட் அணிகளை 2 பிரிவாக பிரிக்க வேண்டும் என்று மைக்கேல் வாகன் கூறியது பின்வருமாறு.

- Advertisement -

6 மாசம் முன்னாடி:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 6 அணிகள் கொண்ட 2 டிவிஷன்கள் இருக்க வேண்டும். எல்லா நாடுகளிலும் விளையாட்டின் செல்வத்தை சமமாக பரப்புங்கள்” என்று கூறியுள்ளார். அவருக்கு தற்போது “இதை ஏன் 6 மாதத்திற்கு முன்பு சொல்லவில்லை” என்ற வகையில் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கலாய்த்து பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 – 1 (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க: 2 வருஷம் ட்ராப் பண்ணாங்க.. நான் செஞ்ச தவறை ரோஹித் தனது கேரியரில் செய்யல.. ஜான்டி ரோட்ஸ்

அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 6 மாதத்திற்கு முன் இங்கிலாந்து 9வது இடத்தில் திண்டாடியது. அந்தப் புள்ளிப்பட்டியலை ஸ்கிரீன்ஷாட் எடுத்து மைக்கேல் வாகனுக்கு ட்விட்டரில் வாசிம் ஜாபர் கொடுத்த பதிலடி பின்வருமாறு. “அனைத்திலும் டைமிங் முக்கியம். ஞானியான மைக்கல் அதை புரிந்துக் கொள்வார். அதனாலேயே அவர் 6 மாதத்திற்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இப்படி இருந்த போது இந்த ட்வீட் போடவில்லை” என்று கூறியுள்ளார்.

Advertisement