இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 100 டெஸ்ட் போட்டிகள், 116 ஒருநாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் தொடரிலும் 212 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் அவர்தான் :
இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓரம் கட்டப்பட்டாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்றளவும் நட்சத்திர வீரராக தொடர்ந்து இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் கரியரில் தனக்கு பிடித்த வீரர் யார்? என்பது குறித்த பதிலை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் ஜடேஜா தான் தனக்கு மிகவும் பிடித்த வீரர் என அஸ்வின் கூறி இருக்கிறார். இதற்கு காரணம் யாதெனில் :
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வரும் அஸ்வின் இதுவரை 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 542 விக்கெடுகளை ஜோடியாக வீழ்த்துள்ளனர். அணி டி20, ஒருநாள் போட்டிகள் என மற்ற வடிவங்களிலும் அவர்களது பிணைப்பு வலுவாக இருந்தது. அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் இருவரும் இணைந்து விளையாடி உள்ளனர்.
அதனால் தனக்கு ஜடேஜா தான் மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று அஸ்வின் கூறியுள்ளார். மேலும் ஜடேஜா குறித்து பேசிய அஸ்வின் : ஜடேஜாவிற்கு இயற்கையிலேயே பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்து திறமையும் இருந்து வருகிறது. அதனால் தான் அவரால் சிறப்பாக செயல்பட முடிகிறது. நான் ஜடேஜா போன்று பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட முடியாது.
இதையும் படிங்க : 13க்கு 1.. யுவராஜை நெருங்க முடியாதுன்னு சாபமிட்டேன்.. தோனியை தொடர்ந்து கபில் தேவை விமர்சித்த யோக்ராஜ்
ஆனால் அவரைப் போன்று இந்திய அணிக்காக என்னுடைய பங்களிப்பை வழங்க முடியும். எங்கள் இருவருக்குள் நல்ல பிணைப்பு இருக்கிறது. அதன் காரணமாகவே இத்தனை ஆண்டுகள் நாங்கள் ஒன்றாக இணைந்து விளையாடி வருகிறோம் என ஜடேஜா குறித்து அஸ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



