இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2004 – 2019 வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். அந்தக் காலகட்டங்களில் அதிரடியாக பேட்டிங் செய்து மேட்ச் வின்னராக செயல்பட்ட இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றி அமைத்தார். மேலும் சிறந்த ஃபினிஷராகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்ட அவர் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.
அத்துடன் 5 ஐபிஎல் கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்றுள்ள அவர் வெற்றிகரமான கேப்டனாக அறியப்படுகிறார். முன்னதாக விக்கெட் கீப்பராக இருப்பதால் பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளை வைத்து அதற்கு தகுந்த ஃபீல்டிங்கை செட்டிங் செய்து அவர்களை அவுட்டாக்குவதில் தோனி சிறந்து விளங்குகிறார். மேலும் நடுவர்கள் கொடுக்கும் தீர்ப்பை எதிர்த்து தோனி எடுக்கும் பெரும்பாலான டிஆர்எஸ் முடிவுகள் அவருக்கு சாதகமாகவே அமையும்.
ஓய்வுக்கு பின்:
அதனால் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று அவரை ரசிகர்கள் பாராட்டுவதும் வழக்கமாகும். இந்நிலையில் டிஆர்எஸ் ரிவ்யூ எடுப்பதில் தோனி அம்பயர்களுக்கு நிகராக துல்லியத்துக்கும் நெருக்கமான முடிவுகளை எடுப்பதாக இந்தியாவின் பிரபல அம்பயர் அனில் சௌத்ரி பாராட்டியுள்ளார். எனவே ஓய்வுக்குப் பின் தோனி அம்பயர் வேலையை கையில் எடுத்தால் அற்புதமாக செயல்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தோனிக்கு பின் இந்திய அணியில் ரிஷப் பண்ட் நல்ல விக்கெட் கீப்பராக முன்னேறி வருவதாகவும் கூறும் அனில் சௌத்ரி இது பற்றி பேசியது பின்வருமாறு. “தோனி அனைத்து நேரங்களிலும் சரியாக இருக்க மாட்டார். ஆனால் டிஆர்எஸ் அழைப்புகளில் அவருடைய முடிவுகள் துல்லியத்துக்கும் நெருக்கமாக இருக்கும். அவருக்கு கிரிக்கெட்டைப் பற்றி நிறைய ஐடியா உள்ளது”
அம்பயராக தோனி:
“ரிஷப் பண்ட்டும் ஆரம்பக் நாட்களை விட தற்போது நன்றாக முன்னேறியுள்ளார். இவை அனைத்தும் அனுபவத்தால் வரும். ரிப்ளையில் பார்க்கும் போது உங்களால் சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் தான் கண்காணிப்பதற்கான சிறந்த இடத்தை பெற்றுள்ளார்கள். அமைதியாக இருக்கக்கூடிய அவர்களால் பந்தின் பாதையை பின்பற்ற முடியும்”
இதையும் படிங்க: ஆஸி அணியில் 2 பிரச்சனை இருக்கு.. இதை சமாளிச்சுட்டா இந்தியா 3 – 1ன்னு ஜெயிக்கும்.. சுனில் கவாஸ்கர் கணிப்பு
“உண்மையில் சில நேரங்களில் விக்கெட் கீப்பர்கள் பந்தை பின்தொடர்வதால் அவர்களின் இயக்கத்தின் அடிப்படையில் அமபயர்கள் தங்களுடைய முடிவுகளை தீர்மானிக்கின்றனர். தோனியின் முடிவுகள் துல்லியத்திற்கும் நெருக்கமாக இருக்கும். பல நேரங்களில் அவர் டிஆர்எஸ் எடுப்பதிலிருந்து தமது அணியை நிறுத்தியுள்ளார். எனவே அவர் நல்ல அம்பயராக வர முடியும். அதற்கு அவர் களத்திற்குள் 7 மணி நேரங்கள் நிற்க தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



