ஆஸி அணியில் 2 பிரச்சனை இருக்கு.. இதை சமாளிச்சுட்டா இந்தியா 3 – 1ன்னு ஜெயிக்கும்.. சுனில் கவாஸ்கர் கணிப்பு

Sunil Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களை இந்தியா வென்றது. எனவே இம்முறை ஆஸ்திரேலியாவில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார். அதே போல இம்முறை இந்தியாவை சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் 2 பிரச்சனைகளை கொண்டிருப்பதாக இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பிரச்சனைகள்:

குறிப்பாக டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணி புதிய ஓப்பனிங் ஜோடியை தேடுவதாக கவாஸ்கர் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியில் நிலையான மிடில் ஆர்டர் இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே முதல் டெஸ்ட் போட்டியில் வென்று நல்ல துவக்கத்தைப் பெற்றால் இந்தியா 3 – 1 (5) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வெல்லும் என்று கவாஸ்கர் கணித்துள்ளார்.

இது பற்றி மிட்-டே இணையத்தில் அவர் கூறியது பின்வருமாறு. “திறமையான வீரர்கள் கொண்ட இரு அணிகள் பங்கேற்கும் அந்த தொடர் மிகுந்த சுவாரசியமானதாக இருக்கும். அது டெஸ்ட் போட்டிகள் ஏன் நாம் விரும்பும் ஃபார்மட்டாக இருக்கிறது என்பதை காட்டும். என்னுடைய கணிப்பு 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வெல்லும். டேவிட் வார்னர் ஓய்வுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனிங் பேட்டிங்கில் பிரச்சனை இருக்கிறது”

- Advertisement -

இந்தியா வெல்லும்:

“மிடில் ஆர்டரும் கொஞ்சம் ஏமாற்றமாக இருக்கிறது. மறுபடியும் சேனா நாடுகளில் நடைபெறும் தொடர்களில் இந்தியா வழக்கம் போல மெதுவாக ஆரம்பிக்கும். அங்கு முதல் டெஸ்ட் முக்கியமானதாக இருக்கும். அத்தொடருக்கு முன்பாக முதல் தரப் போட்டிகளில் விளையாடாமல் களமிறங்குவதும் சில முதன்மைப் போட்டிகளுக்கு இடையே நிறைய நாட்கள் இடைவெளி இருப்பது இந்தியாவுக்கு எதிராக அமையலாம்”

இதையும் படிங்க: அந்த விஷயத்துக்காக தோனியை மன்னிக்கவே மாட்டேன்.. யுவ்ராஜுக்கு பாரத ரத்னா வழங்கனும்.. யோக்ராஜ் பேட்டி

“அது இப்போதெல்லாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகளுக்கு எவ்வாறு அட்டவணை அமைக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது” என்று கூறினார். அவர் கூறுவது போல 2018 – 19, 2020 – 21 ஆகிய அடுத்தடுத்த தொடர்களின் முதல் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அதன் பின் சிறப்பாக விளையாடி இந்தியா தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement