மகாராஜா டிராபியில் விளையாடிய பிறகு ராகுல் டிராவிட் மகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் – பி.சி.சி.ஐ எடுத்த முடிவு

Samit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ராகுல் டிராவிடின் மகன் சமித் டிராவிட் நடைபெற்று முடிந்த மகாராஜா டி20 தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார். அதோடு வேகப்பந்து வீச்சு ஆல்ரவும்ண்டராக செயல்பட்டு வரும் அவரது பேட்டிங்கும் சிறப்பாக இருப்பதால் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவரிடம் இருந்து பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை.

இருப்பினும் மகாராஜா டி20 லீக் தொடர் முடிந்த கையோடு அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் கையில் அடித்திருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா நாட்டு 19 வயதுக்கு உட்பட்டோர் அணி இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா அணியானது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் தான் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்படி அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருந்தாலும் இந்த தேர்வு ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதுவரை பெரிய அளவில் சோபிக்காத அவரை நேரடியாக பிசிசிஐ தேர்வு செய்தது ஏன்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றார்.

- Advertisement -

மேலும் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில் கர்நாடகாவை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்த இந்திய 19 வயதுக்கு உட்பட்டோர் அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்னும் ஒரு வருஷம் தோனி சி.எஸ்.கே அணிக்காக விளையாடியே ஆகனும்.. அதுல ஒரு நல்லது இருக்கு – சுரேஷ் ரெய்னா கருத்து

ராகுல் டிராவிடின் மகனாக இருப்பதினால் இவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கிருக்கலாம் என்ற பேச்சுக்களும் இருந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த தொடரானது செப்டம்பர் மாதம் துவங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement