இந்த உலகக்கோப்பை தொடரில் இமாலய சாதனையை நூலிழையில் தவறவிட்ட ரோஹித் மற்றும் வார்னர் – விவரம் இதோ

Warner
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

warner

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரின் சச்சினின் 673 ரன்கள் என்ற சாதனையை தகர்க்க இரு வீரர்களுக்கு வாய்ப்பு இருந்தது. அதில் ஒருவர் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா. அவர் இந்த உலககோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக 647 ரன்களை அடித்து இருந்தார். மேலும் 27 ரன்கள் அடித்து இருந்தால் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதியில் ரோகித் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.

Rohith

அடுத்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர்-க்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. அவர் லீக் போட்டியில் முடிவில் 638 ரன்கள் குவித்து இருந்தால். இருந்தார் எனவே இன்னும் 35 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் 9 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். எனவே இந்த இருவரும் அந்த அற்புதமான வாய்ப்பை நழுவ விட்டன.ர் தற்போது வரை சச்சினின் 673 ரன்கள் உலக கோப்பையில் தனிநபர் அதிகபட்சமாக சாதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement