ஆஸ்திரேலியா மாதிரி சூழ்நிலைகளில் பும்ராவை விட அவர் டேஞ்சரான பவுலர்.. பரத் அருண் பேட்டி

Bharat Arun 2
- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ரா இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். மிகவும் வித்தியாசமான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ள அவர் 2016இல் அறிமுகமாகி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதனால் உலகிலேயே தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா நம்பர் ஒன் பவுலராக திகழ்வதாக வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினார். அந்த சூழ்நிலையில் அடுத்ததாக வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் அசத்துவதற்காக பும்ராவுக்கு தற்போது முழுமையான ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஜஸ்ப்ரித் பும்ராவை விட:

அதே போல முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். எனவே அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா, ஷமி, சிராஜ் ஆகியோரை கொண்ட வலுவான வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா போன்ற ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் பும்ராவை விட சிராஜ் மிகவும் ஆபத்தான பவுலர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும் போது பெரும்பாலும் உங்களுக்கு ஆதரவு கொடுக்காத பிட்ச்களில் பந்து வீசுவீர்கள். அங்கே நீங்கள் கொஞ்சம் தந்திரத்துடன் வெளியே வர வேண்டும் அல்லது நம் நாட்டில் நிலவும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் எப்படி மாற்றி பந்து வீச வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”

- Advertisement -

ஆபத்தான சிராஜ்:

“அது தான் சிராஜ் மற்றும் ஷமிக்கு பெரிதும் உதவியது என்று நினைக்கிறேன். அதனாலேயே சூழ்நிலைகள் சரியாக இருக்கும் போது பந்து ரிவர்ஸ் ஆகும் போது சிராஜ் உலக கிரிக்கெட்டிலேயே மிகவும் ஆபத்தான பந்து வீச்சார்களில் ஒருவராக இருக்கிறார்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் நடைபெற்ற 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் சிராஜ் இலங்கையை 50 ரன்களுக்கு சுருட்டியதைப் போன்ற மிரட்டலான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 6 – 0.. அப்படியே இதையும் காட்டுங்க.. விராட் கோலியை கலாய்த்த மைக்கேல் வாகனுக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி

அதே போல 2021 காபா, 2022 லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெல்வதற்கும் சிராஜ் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் ஃபிளாட்டான பிட்ச்களிலும் கடினமான சூழ்நிலைகளிலும் பும்ரா அசத்துகிறார். அதனாலேயே பும்ரா ஆல் ஃபார்மட் பவுலராக பாராட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement