சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் தலைவராக இருக்கும் கிரெய்க் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30-ம் தேதி உடன் முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து புதிய தலைமுறை தேர்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி தீவிரபடுத்தி உள்ளது. அந்த வகையில் புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே பெறப்பட்டு வந்த வேளையில் பி.சி.சி.ஐ-யின் செயலாளரான ஜெய் ஷாவும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஜெய் ஷா வரலாற்று சாதனை :
ஐசிசியின் தலைவராக இருக்கும் ஒருவர் மூன்று முறை அந்த பதவியில் இருக்கலாம் என்பதும் ஒவ்வொரு பதவிக்காலமும் இரண்டு ஆண்டுகள் அளவு இருக்கும் என்பதே அதன் விதிமுறையாக இருந்தது. அந்த வகையில் இரண்டு முறை ஐசிசி சேர்மனாக இருந்த கிரெய்க் பார்கலே இரண்டுமுறை அந்த பதவியில் இருந்தார்.
மேலும் தான் ஐசிசி சேர்மன் பதவியில் அவர் தொடர விரும்பவில்லை என்று தெரிவித்ததால் புதிய தலைவரை தேர்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வகையில் தற்போது ஐசிசி-யின் புதிய தலைவராக யார் வரப்போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இவ்வேளையில் பி.சி.சி.ஐ-யின் செயலாளர் ஜெய் ஷா போட்டியின்றி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நிர்வாகத்தினருடன் ஜெய் ஷாவிற்கு நல்ல ஆதரவு இருந்ததால் அவர் போட்டியின்றி நேரடியாக ஐசிசி-யின் தலைவராக உருவெடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷா குஜராத் மாநில கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தனது வாழ்க்கையை தொடங்கி அதற்கடுத்து பி.சி.சி.ஐ-யின் செயலாளராக மாறினார். தற்போது பிசிசிஐ-யிலும் சிறப்பான பங்கினை வகித்த அவர் ஐசிசி தலைவரானது மட்டுமின்றி மிக இளம் வயதிலேயே ஐசிசி தலைவரான நபர் என்ற வரலாற்று சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு பணம் முக்கியமில்ல.. அவர் அதை செய்யவும் மாட்டாரு.. அஸ்வின் கணிப்பு
தற்போது ஜெய் ஷாவுக்கு 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதம் 20-ஆம் தேதி கிரெய்க் பார்க்லே பதவி விலகியதும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஐசிசி தலைவராக ஜெய் ஷா செயல்பட இருக்கிறார்.



