துலீப் கோப்பையில் ஜடேஜா உட்பட 3 வீரர்கள் விலகல்.. ருதுராஜ் அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர்கள் அறிவிப்பு

Duleep Trophy
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் பெங்களூர் மற்றும் அனந்தபூர் நகரில் நடைபெற உள்ளது. அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டது. மற்றபடி ருதுராஜ், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரது தலைமையில் பெரும்பாலான இந்திய வீரர்கள் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அந்தத் தொடரிலிருந்து நட்சத்திரம் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதற்கான காரணம் என்னவென்று பிசிசிஐ தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான பி அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜா முதல் ரவுண்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மாற்று வீரர்கள்:

அவருக்கான மாற்று வீரரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. அதே போல நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவருமே துலீப் கோப்பையின் முதல் ரவுண்டிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் பி அணியில் இடம் பிடித்திருந்தால் சிராஜுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ருதுராஜ் கைக்வாட் தலைமை தாங்கும் சி அணியில் இடம் பிடித்திருந்த உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக மத்திய பிரதேச மாநிலத்தின் கௌரவ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்தாக பிசிசிஐ கூறியுள்ளது. அதில் 140 – 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து பந்து வீசக்கூடிய உம்ரான் மாலிக் வெளியேறியுள்ளது ருதுராஜ் தலைமையிலான சி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தயாராகும் வீரர்கள்:

இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும் முதல் ரவுண்டில் ஏ மற்றும் பி அணிகளும் சி மற்றும் டி அணிகளும் மோதுகின்றன. செப்டம்பர் 15ஆம் தேதி துவங்கும் 2வது ரவுண்டில் பி மற்றும் சி அணிகளும் ஏ மற்றும் டி அணிகள் மோதுகின்றன. இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கும் கடைசி ரவுண்டில் பி மற்றும் டி அணிகளும் ஏ மற்றும் சி அணிகளும் மோத உள்ளன.

இதையும் படிங்க: 80க்கு 20.. ஏஐ டெக்னாலஜி வெச்சு.. இந்தியா போன்ற யாருமே செய்யாத அறிவிப்பை வெளியிட்ட பாக் தலைவர்

அந்த 6 போட்டிகளின் முடிவில் அதிகப் புள்ளிகளை பெறும் அணி 2024 துலீப் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வெல்லும். அந்தத் தொடரில் சிறப்பாக வீரர்கள் அடுத்து நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்தத் தொடரில் அசத்துவதற்கு இந்திய வீரர்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement