இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு சமூக வலைதள பதிவில் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன் அதுவரை காத்திருங்கள் என்று பதிவிட்டு இருந்தார். அவரது இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ராகுல் ஓய்வு பெற இருப்பதனாலே இதுபோன்ற பதிவை வெளியிட்டுள்ளார் என்று ரசிகர்கள் வதந்திகளை பரப்பினர்.
கே.எல் ராகுல் கொடுத்த விளக்கம் :
ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாத அவர் இலங்கையை அணிக்கு எதிரான தொடரிலும் விளையாடவில்லை. இதன் காரணமாக அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் பலரும் தாங்களாகவே வதந்திகளை பரப்பினர்.
அது குறித்து செய்தியும் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. இந்நிலையில் கே.எல் ராகுல் அப்படி ஒரு பதிவை வெளியிட என்ன காரணம் என்று குறித்த தகவலை தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : மனநலம் குன்றிய குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக நானும் என் மனைவி அதியா ஷெட்டி ஆகியோரம் இணைந்து கிரிக்கெட் வீரர்களின் பொருட்களை ஏலம் விடுவதற்கான ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காகவே அந்த பதிவை வெளியிட்டிருந்தோம்.
அப்படி நாங்கள் நடத்திய இந்த ஏலத்தில் விராட் கோலியின் ஜெர்சி 40 லட்ச ரூபாய்க்கும், கோலியின் கையுறை 28 லட்ச ரூபாய்க்கும் ஏலம் போனது. அதேபோன்று ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ் தோனி ஆகியரது பேட் சுமார் 37 லட்சத்திற்கு ஏலம் போனது. அதோட ராகுல் டிராவிடின் பேட்டும் 11 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
இதையும் படிங்க : தேங்க்யூ மிஸ்டர் ஐசிசி.. சர்வதேச கிரிக்கெட்டில் ஷிகர் தவான் படைத்துள்ள சாதனைகளின் பட்டியல்
இதன்மூலம் மொத்தமாக கிடைத்த ஒரு கோடியே 26 லட்ச ரூபாயை நானும் என் மனைவியும் சேர்ந்து மனநலம் குன்றிய குழந்தைகளுக்காக வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். கே.எல் ராகுலின் இந்த அறிவிப்பின் மூலம் ஓய்வு குறித்த அவரது வதந்தியும் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



